Pages

Monday, 5 December 2011

நிலத்தின் வகைகள்

1. ஆற்றுவைப்பு - ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடியாகும் நிலம் 2. அருக்கக் கொல்லை - ஆற்றோரத்தில் உள்ள நிலம் 3. படுகை - ஆற்றோரத்து நிலம். 4. கரைவழி - ஆற்றோரமான நிலம். 5. காற்புரவு - ஆற்றுப் பாய்ச்சல் நிலம். 6. வெளிவாய்ப் படுகை - ஆறு, குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம். 7. இறைப்புப் பட்டரை - கிணற்றுப் பாய்ச்சலுள்ள நிலம். 8. ஏற்றப்பட்டரை - ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம். 9. தூர்வை - கிணற்றைச் சேர்ந்த நிலம். 10. ஆயக்கட்டு - ஒரு நீர்நிலையை ஆதாரமாகக் கொண்ட நிலம். 11. நன்செய்நிலம் - நீர்வளம் நிறைந்துள்ள நிலம். 12. புன்செய் நிலம் - வானம் பார்த்த நிலம், கொல்லை நிலம். 13. அளக்கர் திணை - கடலாற் சூழப்பட்ட நிலம். 14. வானம் பார்த்த நிலம் - மழைநீரால சாகுபடி செய்யப்படும் நிலம் 15. எரங்காடு - பருத்தி விளையும் புன்செய் நிலம். 16. நாற்றங்கால் - விதைகளை விதைத்து நாற்று பயிரிடும் நிலம். 17. சாட்டி - அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம், உரமிடப்பட்டிருக்கும் நிலம். 18. குளக்கீர் - குளத்தில் மதகையடுத்துள்ள வயல், குளம் பார்த்த வயல் 19. நகரி - அரசுக்குரிய புறம்போக்கு. 20. பெரும்பேறு - அரசுக்குரிமையான நிலம். 21. சூன் - புறம்போக்கு நிலம். 22. குடிவார நிலம் - குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம். 23. பள்ளத்தாக்கு - இரண்டு மேடுகட்கு நடுவேயுள்ள நிலம். 24. பள்ளம் - பள்ளத்தில் உள்ள நிலம், தாழ்ந்த நிலம். 25. தில்லியம் - புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். 26. உறாவரை - பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம். 27. எடார் - வெளிநிலம். 28. செய்யுள் - விளைநிலம் 29. தொய்யில், செறிப்பு - உழுநிலம். 30. பண்ணை - வயல் 31. செந்திரம் - செய்தல் நிலம். 32. பாசல் - பசிய விளைநிலம் 33. நன்னிலம், நன்செய் - நெல் விளையும் புலம். 34. படப்பு - கொல்லை. 35. துடவை - உழவுக் கொல்லை. 36. விதைப்புனம் - புதுக்கொல்லை. 37. முதை - பழங்கொல்லை. 38. பின்ை - வீட்டுக் கொல்லை 39. திருத்து - நன்செய் நிலம். 40. தாக்கு - நெல் வயல். 41. வற்புலம் - மேட்டு நிலம். 42. தகர், தராய் - மேட்டு நிலம். 43. கருஞ்செய் - நன்செய் நிலம். 44. காங்கவீனம் - தினைவிளையும் நிலம். 45. தினைப்புனம் - தினைவிளையும் நிலம். 46. மலைப்புனம் - தினைவிளையும் நிலம். 47. சேற்றுப்புழி - உழப்பட்ட நிலம். 48. விரைகால் - விதைக்குரிய நிலம். 49. தடி - சிறு வயல். 50. காணியாட்சி - உரிமை நிலம். 51. காடாரம்பம் - நீர்ப்பாசனமில்லாத நிலம். 52. வட்டகை - அடைப்பு நிலம். 53. எகபலி - ஒருபோக நிலம். 54. ஓராண் காணி - ஒருவனுக்கே உரிய நிலம். 55. காணி நிலம் - நூறு குழி அளவுள்ள நிலம். 56. கந்தக விரைப்பாடு - ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம். 57. முழுமனை - 60 அடி நீளமும் 40 அடி அகலமும் உள்ள நிலம். 58. அரைக்காணி - நூற்றறுபதில் ஒரு பங்கு.