Pages

Saturday, 3 December 2011

நம் தமிழ்


உலகில் இன்று பெரும் பிரச்சனை மதம், இந்த மதம் சில இடங்களில் நன்மை விளைவித்தாலும் பல இடங்களில் தீமையையே விதைக்கிறது. கால ஓட்டத்திற்கு தகுந்தார்ப்போல் மதத்தின் ஈடுபடும், பெரும்பான்மையும் மாறிக்கொண்டே இருக்கும் இப்படி பட்ட மதத்திற்கு இருக்கும் மதிப்பு இனத்திற்கு இல்லாமல் போவது ஏன்?

கலாச்சாரம், பண்பாடு, மதம், தெய்வம் என்று அனைத்திற்கும் அடிப்படை இந்த மொழியே, மொழியின் அடிப்படியில் இருக்கும் இன உணர்வின் வெளிப்பாடுதான் நாகரிக வாழ்க்கை, ஆனால் அப்படிப்பட்ட மொழிக்கு, இனத்திற்கு இன்று மரியாதை இருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

காசு பார்க்க முடியவில்லை என்னும் ஒரே காரணத்திற்காக இன்று மொழிப்பற்றும், அதனை அடிப்படையாக கொண்ட இனப் பற்றும் குறைந்து கொண்டே வருகிறது.

பிற மொழிகளை கற்றுக்கொள்வது என்றுமே தவறில்லை, ஆனால் காசு கிடைக்கிறது என்பதற்காக அவற்றை பெருமையாக நினைப்பது என்பதைப்போல ஒரு கேவலமான செயல் உலகில் இல்லை.

பிற மொழிகளில் குழந்தை புலமை பெற வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களே தாய் மொழியை தவிர்த்து பிற மொழியை திணிப்பது என்பது தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்காமல் தவிர்ப்பதற்கு சமமாகவே நினைக்கிறேன்.

மொழிகளைப் பொறுத்த வரையில் இல்லாத ஒரு சில வார்த்தைகளை பிற மொழிகளில் இருந்து எடுத்துக்கொள்வது என்பது இயல்பே, உதாரணமாக ஆங்கிலத்தில் லத்தீனும், பிரன்ச்சும், கலந்திருப்பதுபோல் தமிழும் கலந்திருக்கிறது

(கட்டுமரான், வெட்டிவேர்)

http://en.wikipedia.org/wiki/Catamaran

http://en.wikipedia.org/wiki/Chrysopogon_zizanioides


இல்லாத வார்த்தைகளாய் இருந்தால், பெயர்களாய் இருந்தால் தூய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவிட்டாலும், அம்மா என்பதற்கு பதிலாக மம்மி என்று பழக்கப் படுத்துவது இதைவிடக் கொடுமை உலகில் எதுவுமே இல்லை இதுவே தமிழ் மொழி துரோகமே.

தமிழின் சிறப்பே ஒவ்வொரு பொருளின் பெயருக்கும் காரண பொருளைக் கொண்டும், அதன் தன்மையை பொருத்தும் பெயரிட இயலும், ஆனால் இது அனைத்து மொழிகளில் இயலுமா என்பது கேள்விக் குறியே

இப்படி ஒரு தனிச்சிறப்பான மொழியை தவிர்த்து காசு உள்ள நாட்டின் மொழி, அல்லது இந்த மொழியால் அதிக காசு கிடைக்கிறது என்பதற்காக தமிழை இழிவாய் நினைத்து பிற மொழிகளை பெருமையாய் நினைத்து புழங்குவதென்பது எப்படி பட்ட வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள், இல்லை மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது சொல்வதை நீங்களே கேட்டுப் பாருங்கள்.

வளர்க தமிழ்
வாழ்க தமிழினம்