Pages

Monday, 5 December 2011

அறியாதோர் அறிந்து கொள்க

உலகில் 2796 மொழிகள் உள்ளன. இவற்றில் இலக்கிய இலக்கணம் பெற்றவை 600 மொழிகள். இவற்றுள்ளும் 2000 ஆண்டுகள் தொன்மை வரலாறு உடையவை தமிழ், சீனம், இலத்தீன், ஈபுரு, கிரேக்கம், அராமிக் என்னும் 6 மொழிகளே ஆகும். இதற்கு அடுத்த நிலையில் சமஸ்கிருதம், பெர்சியன், அரபி, முதலிய மொழிகள் இருக்கின்றன. இதில் இலத்தீனும் ஈபுருவும் செத்துப்போன மொழிகள். ஈபுரு மொழிக்கு உயிரூட்டும் முயற்சியில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டுள்ளது. கிரீக் என்றுமே பேச்சு வழக்கில் இருந்தது இல்லை. எழுத்து வழக்கு மட்டுமே உண்டு. இந்தியத் துணைக் கண்டத்தில் பேசப்படும் மொழிகள் 1652. இவற்றுள் 22 மொழிகள் மட்டுமே தேசிய மொழிகள் என்னும் சிறப்புப் பெற்று இந்திய அரசமைப்பின் 8 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ் மட்டுமே தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, தண்மை, மென்மை, தலைமை, அருமை என்னும் பல வகைச் சிறப்புகளை ஒருங்கே உடைய மொழியாக விளங்குகிறது. இந்திய மொழிகளிலேயே பண்பாட்டு மொழி எனும் தகுதிப்பாடு தமிழுக்கு மட்டுமே உண்டு. இலங்கை, சிங்கப்பூர், நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக ஒளிர்கிறது. மலேசியவில் நாட்டு மொழி, நாடாளு மன்ற மொழியாகத் திகழ்கிறது. தமிழில் படித்துப் பட்டம் பெறுவதை கனடா அரசு அங்கீகரித்துள்ளது. உலக அரங்கில் 57 நாடுகளில் உள்ள தமிழர்களால் பேசப்படும் மொழி தமிழ். உலகு எங்கும் பரவலாகப் பேசப்படும் ஒரே ஆசிய மொழி தமிழ். எனவே, தமிழ் இன்று சர்வதேச மொழிகளில் ஒன்று எனும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளது. தமிழர்கள் ஒரு மொழியினர். பன்னாட்டினர் எனும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளனர். இத்தனைச் சிறப்புகள் உள்ள மொழியாகத் தமிழ் இருப்பதால்தான். 1856 இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் உயர் தனிச் செம்மொழி என்று 1885 இல் முதன் முதலில் அறிவிக்கக் கோரினார். அவருடைய முயற்சிக்குப் பின்புலமாகவும், பெருந்துணையாகவும் சுயமரியாதைச் சிந்தனையாளர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை, நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் இருவரும் இருந்தார்கள். மேலை நாட்டு அறிஞர்கள் டாக்டர் எமினோ, அறிஞர் சீகன்பால்கு, ஜார்ஜ் ஹார்ட், கிளீயர்சன், கமில்சுவலபில், நோவாம் சாம்ஸ்கி, வின்சுலோ, கிராண்ட், ரெனால், மெட்டில், ரியாசு டேவிட், முதலியவர்கள் நடுநிலையாக நின்று வடவஞ்சித் தமிழ் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் அத்தனையும் உடையதாக இருக்கிறது என்று நிறுவியுள்ளாாகள்.