Pages

Friday, 2 December 2011

காமிக்ஸ் பத்தகங்கள்

சிறு வயதில் பள்ளி செல்லும் போது எங்கள் பள்ளி அருகே உள்ள கிளை நூலகத்தில், தினமும் கையெழுத்து போட்டு விட்டு படிக்க செல்லுவோம். படிப்பதை விட அந்த வயதில் கையெழுத்து போடுவதுதான் எங்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயம்... குப்புசாமி என்று பெயர் இருக்கின்றது என்று உதாரணத்ததுக்கு வைத்துக்கொள்வோம்..முதல் ஒரு வாரத்துக்கு குப்புசாமி பெயர் புரியும் படி எழுத்து இருக்கும் அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் வெறும் கிறுக்கலாய் இருக்கும்.... அதன் பிறகு முதல் எழுத்து மட்டும்தான் இருக்கும் அதன் பிறகு இதயதுடிப்பு கிராப்போல் வளைந்து நெளிந்து இருக்கும்....

அப்படி அடித்து பிடித்த கையெழுத்து போட்டு விட்டு முதன் முதலாக வாசிக்கும் வாசிக்கும் பேப்பர் தினத்தந்திதான்... அந்த பேப்பர் எடுத்த இரண்டாவது பக்கத்தில் படக்கதை கன்னித்தீவு இருக்கும். லைலா என்னவானாள், அவள் கடத்திய அரக்கனிடம் இந்து தப்பித்தாலா? சிந்துபாத் அவளை எப்படி காப்பாற்ற போகின்றான் என்ற கவலை எல்லாம் அப்போது எழும் அது பற்றி பேசிக்கொள்வோம்.......

அந்த சின்ன இடத்தில் மூன்றாக துடுத்து படம் போட்டு இருப்பார்கள் சில நாட்கள் சிந்துபாத் போடும் கத்தி சண்டையை வைத்து இரண்டு நாட்களுக்கு ஒப்பேற்றுவார்கள், சில நாட்களில் அவர் மட்டும் பிரேமில் இருப்பார்... அவர் யோசிப்பதாக இருக்கும் லைலாவை உடன் காப்பாற்றவேண்டும்... அவள் எங்கிருக்கின்றாள் என்று தெரியவில்லை? இதுதான் சில நாட்களில் இருக்கும் இருப்பினும் அதனை தொடர்ந்து வெக்கம் இல்லாமல் படித்துக்கொண்டு இருப்போம்....அதன் பிறகு மெல்ல ராணிகாமிக்ஸ் வந்தது...ராணிகாமிக்சில் செவ்விந்தியர்கள், ஷெரிப், போன்ற கௌபாய் கதைகள் தொடர்ந்து வந்தன... அதிலும் அந்த கொள்ளையர்களிடமும், ஷெரிப்பின் ஷு கால்களிலும் ஒரு சின்ன சக்கரம் இருக்கும் ... அது தீபாவளி பண்டிகைக்கு அம்மா சோமாஸ் செய்யும் போது மாவின் உள்ளே தீனி வைத்து விட்டு அதனை இது போன்ற சக்கர கத்தியால்தான் கட் பண்ணி எடுப்பாள்....நகரத்துக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் ஷெரிப்புக்கு அவ்வப்போது கொள்ளையர்களால் பாதிப்பு ஏற்பட அவர்கள் கொட்டத்தை அடக்குவதுதான் ஷெரிப்பின் வேலை..... இந்த கதைகளில் அதிகம் என்னை கவர்ந்தது துப்பாக்கி சண்டைதான்..... அதே போல் டைகர் ஹென்றி, டொன்டொயிங் என்ற வார்த்தைகள் அப்போது பிரசித்தம்.... ஜேம்ஸ் பாண்ட் கதைகள் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.. சரியான நேரத்தில் நினைவு படுத்திய யாசவிக்கு என் நன்றிகள்


பேட்மேன் , மந்திரவாதி மான்ட்ரேக், ஆர்ச்சி,போன்றகதைகளும் ரொம்ப பேமஸ்.... இருப்பினும் லயன் காமிக்ஸ்ல் , முத்துக்காமிக்ஸ்,மந்திரக்கை மாயாவி கதைகள்தான் என் ஆல்டைம் பேவரிட்,கொள்ளையர்களை அவர்கள் இடத்தில் மறைந்து சென்று துப்பறிவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதிலும் அவருக்கு பவர் போய் விட்டால் ஏதாவது ஒரு கரண்ட் கனெக்ஷனில் கை வைத்து மாயமாகிவிடுவார்... அப்புறம் எனக்கு ரொம் பிடித்த கதை என்றால் ஸ்பைடர்மேன் கதைககள்தாள் , சில கதைகளில் ஸ்பைடர்மேன் வில்லனாகவும் நல்லவனாகவும் வருவார்...தலைப்புகள் எல்லாம் செம கமெடியாக வைத்து இருப்பார்கள்..... விசித்திர விமாணங்கள்,திமிங்கில அரக்கன், மர்மத்தீவில் மயாவி போன்ற அசத்தல் தலைப்புகள் இடம் பெற்று இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் கண்ணில் அதிகம் படுவதில்லை....அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தகங்கள் கண்ணில் தென் படுகின்றன... பள்ளி வருடக்கடைசி கோடை விடுமுறையில் இந்த புத்தகங்களுக்கு நல்ல மதிப்பு எங்கள் மத்தியில், புத்தகங்கள் பகிர்ந்து கொள்வோம், அதற்காகவே சண்டை அதிகம் போட்டுகொள்ளமாட்டோம்.... சண்டை போட்டுவிட்டால் யாரிடம் போய் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் வாங்குவது சொல்லுங்கள்???இப்போதெல்லாம் சுட்டி டிவியில் எல்லாவற்றையும் பிள்ளைகள் பார்த்து விடுகின்றார்கள். இதனால் பிள்ளைகளின் கற்பனை திறன் குறைந்து இருந்தாலும் அது வேறு வழியில் இயற்க்கை சமன் செய்து விடும்.... காரணம் முன்னைவிட பிள்ளைகள் ரொம் சுட்டியாக இருக்கின்றார்கள்,. கிராமம் நகரம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஸ்மார்ட்டாக இருக்கின்றார்கள் அதற்க்கு காரணம் டிவி என்றால் அது மிகையில்லை...நிறைய படக்கதை படிக்க எதாவது தப்பு செய்து விட்டு ஜெயிலுக்கு போய் ஒரு அறை முழுவதும் காமிக்ஸ் பத்தகங்கள் நிரப்பி, அம்மாவின் கடைக்கு போய் வா என்ற இம்சை இல்லாமல் எந்த டிஸ்டர்பும் இல்லாமல் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைத்த காலங்ககள் எல்லாம் ஒரு காலம். நிச்சயமாக அது ஒரு கனாகாலம்தான்..