தமிழக முதல்வர் மு. கருணாநிதி சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகள் அளித்த
வரவேற்பில் 6/1/99 அன்று ஆற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது.
(தமிழரசு, ஜனவரி 1-31, 1999, ப. 33-35 )
" அண்ணா அவர்கள் எத்தனைப் புலவர்கள் சங்க காலக் கட்டத்திலே வாழ்ந்தார்கள் என்று கணக்கெடுத்துப்
புறநானூற்றுப் புலவர்களுடைய பட்டியலை மாத்திரம் வெளியிட்டு, தம்பிக்கு எழுதிய கடிதத்திலே சுட்டிக்
காட்டியிருந்தார். நான் அதைப் படித்துப் பார்த்தவுடனேயே அண்ணா புறநானூற்றுப் புலவர்களை மாத்திரம்
குறிப்பிட்டிருக்கிறார். அகநானூற்றுப் புலவர்களையும் எடுத்து நான் சேர்த்துப் பார்த்தேன். ஏறத்தாழ அந்தப்
புலவர்களின் எண்ணிக்கை 210ஐ எட்டுகிறது. 210 பேர் அகநானூறு, புறநானூறு பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
அவர்களுடைய பெயர்களைச் சொன்னால் அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட பெயர்களை அவர்கள் கொண்டிருந்தார்கள்
என்று அந்த உண்மை நமக்குத் தெரியும்.
அகநானூறு, புறநானூறு பாடிய புலவர்கள்:
1. அடை நெடுங்கல்வியார்
2. அண்டர்மகன் குறுவழுதி
3. அரிசில்கிழார்
4. அள்ளூர் நன்முல்லையார்
5. அந்தி இளங்கீரனார்
6. அம்மூவனார்
7. ஆடுதுறை மாசாத்தனார்
8. ஆலங்குடி வங்கனார்
9. ஆலத்தூர் கிழார்
10. ஆலியார்
11. ஆவூர் கிழார்
12. ஆவூர் மூலங்கிழார்
13. ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
14. ஆலம்பேரிச் சாத்தர்
15. நக்கண்ணையார்
16. இடைக்காடனார்
17. இடைக்குன்றூர்க் கிழார்
18. இரும்பிடர்த்லையார்
19. ஈழத்துப் பூதன் தேவனார்
20. உலேச்சனார்
21. உறையூர் இளம்பொன் வாணிகனார்
22. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
23. உறையூர் மருத்துவன் தாமோதரனார்
24. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
25. உறையூர் முதுகூத்தனார்
26. உமட்டூர்க்கிழார் மகனார் பரங்கொற்றனார்
27. உரோடகத்துக் கந்தரத்தனார்
28. உலோச்சனார்
29. ஊட்டியார்
30. ஊன்பொதி பகங்குடையார்
31. எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
32. எயினந்தை மகனார் இளங்கீரனார்
33. எருமை வெளியனார்
34. எருமை வெளியனார் மகனார் கடலனார்
35. ஐயாதிச் சிறுவெண்டரையர்
36. ஐயூர் முடவனார்
37. ஐயூர் மூலங்கிழார்
38. ஒக்கூர் மாசாத்தனார்
39. ஒக்கூர் மாசாத்தியார்
40. ஒருசிறைப் பெரியனார்
41. ஒரு உத்தனார்
42. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
43. ஓரம்போகியார்
44. ஓரேருழவர்
45. ஒளவையார்
46. கட்லுண்மாய்ந்த இளம்பெருவழுதி
47. கண்ணகனார்
48. கணியன் பூங்குன்றன்
49. கபிலர்
50. கயமனார்
51. கருங்குழலாதனார்
52. கருவூர்க் கதப்பிள்ளை
53. கருவூர்க் கண்ணம் புல்லனார்
54. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்
55. கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
56. கல்லாடனார்
57. கழாத் தலையார்
58. கழைதின் யானையார்
59. கள்ளில் ஆத்திரையனார்
60. கடுந்தொடைக் காவினார்
61. கணக்காயனார் மகனார் நக்கீரனார்
62. காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
63. காரிகிழார்
64. காவாட்டனார்
65. காவற்பெண்டு
66. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
67. காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
68. காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
69. காவன் முல்லைப்பூதனார்
70. குட்டுவன்கீரனார்
71. குடபுலவியனார்
72. குடவாயிற் கீரத்தனார்
73. குண்டுகட் பாலியாதன்
74. குறமகன் இளவெயினி
75. குறுங்கோழியூர்க்கிழார்
76. குன்றூற்க்கிழார் மகனார்
77. குறுங்குடி மருதனார்
78. குன்றியனார்
79. கூகைக் கோழியார்
80. கூடலூர்க்கிழார்
81. கோடைபாடிய பெரும்பூதனார்
82. கோதமனார்
83. கோப்பெருஞ்சோழன்
84. கோவூர்க்கிழார்
85. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார்
86. சங்கவருணரென்னும் நாகரியர்
87. சாகலாசனார்
88. சாத்தந்தையார்
89. சிறுவெண்டரையர்
90. சீத்தலைச் சாத்தனார்
91. செல்லூர்க் கோசிகன் கண்ணனார்
92. சேரமான் கணைக்காலிரும்பொறை
93. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
94. சேந்தம் பூதனார்
95. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருத்தும்பியார்
96. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
97. சோழன் நல்லுருத்திரன்
98. சோழன் நலங்கிள்ளி
99. தன்காற்பூட் கொல்லனார்
100. தங்கால் முடக்கொற்றனார்
101. தாமப்பல கண்ணனார்
102. தாயங்கண்ணனார்
103. தாயங்கண்ணியார்
104. திருத்தாமனார்
105. தும்பி சோகினனார்
106. துறையூர் ஓடைக்கிழார்
107. தொடித்தலை விழுத்தண்டினார்
108. தொண்டைமான் இளந்திறையன்
109. நரிவெரூஉத் தலையார்
110. நல்லிறையனார்
111. நன்னாகனார்
112. நக்கீரனார்
113. நல்லாவூர் கிழார்
114. நல் வெள்ளியார்
115. நன்பலூர் சிறுமேதாவியார்
116. நெட்டியமையார்
117. நெடுங்கழுத்துப்பாணர்
118. நெரும்பல்லியத்தனார்
119. நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்
120. நொச்சி நியமங்கிழார்
121. நோய்ப் பாடியார்
122. பக்குடுகை நன்கணியார்
123. பரணர்
124. பாண்டிரங்கண்ணனார்
125. பாண்டியன் அறிவுடைநம்பி
126. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெருஞ்செழியன்
127. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
128. பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் ப¦ருவழுதி
129. பாலை பாடிய பெருங்கடுங்கோ
130. பெருந்தேவனார்
131. பாரி மகளிர்
132. பிசிராந்தையார்
133. பிரமனார்
134. புல்லாற்றூர் எயிற்றியனார்
135. புறத்தினை நன்னாகனார்
136. பூங்கணுத்திரையார்
137. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
138. பெருங்குன்றூர்க்கிழார்
139. பெருங்கோழிநாயக்கன் மகன் நக்கண்ணையார்
140. பெருஞ்சித்திரனார்
141. பெருந்தலைச்சாத்தனார்
142. பெரும்பதுமனார்
143. பெருந்தேவனார்
144. பேய்மகன் இளவெயினி
145. பேரெயின் முறுவனார்
146. பேரி சாத்தனார்
147. பொத்தியார்
148. பொய்கையார்
149. பொருந்திலிளங்கீரனார்
150. பொன்முடியார்
151. போந்தைப் பசலையார்
152. மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
153. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
154. மதுரை இளங்கண்ணி கெளசிகனார்
155. மதுரை இளம்பாலாசிரியர் சேந்தன் கூத்தனார்
156. மதுரை எழுத்தாளனார்
157. மதுரை ஓலைக்கடைக்கண்ணம் புகுந்தாராயத்தனார்
158. மதுரைக் கணக்காயனார்
159. மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார்
160. மதுரைக் கள்ளின் கடையத்தன் வெண்ணாகனார்
161. மதுரை கவுணியன் பூதத்தனார்
162. மதுரை காஞ்சிப்புலவர்
163. மதுரை செங்கண்ணனார்
164. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
165. மதுரைத் தமிழ்க் கூத்தனார்
166. மதுரை நக்கீரர்
167. மதுரைப் படைமங்க மன்னியர்
168. மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்
169. மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
170. மதுரைப் பூதனிள நாகனார்
171. மதுரைப் பேராலவாயார்
172. மதுரைப் போத்தனார்
173. மதுரை மருதனிள நாகனார்
174. மதுரை வேளாசான்
175. மருதனிள நாகனார்
176. மருதம் பாடிய இளங்கடுங்கோ
177. மாங்குடிக் கிழார்
178. மாதி மாதிரத்தனார்
179. மார்க்கண்டேயனார்
180. மாமூலனார்
181. மாற்பித்தியார்
182. மாறோக்கத்து நப்பசலையார்
183. மாற்றூர்கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
184. முடங்கிக் கிடந்த சேரலாதன்
185. முரஞ்சியூர் முடிநாகராயர்
186. மோசிகீரனார்
187. மோசி சாத்தனார்
188. வடம நெடுந்தத்தனார்
189. வடம வண்ணக்கண் தாமேதரனார்
190. வடம வண்ணக்கண் பெருஞ்சாத்தனார்
191. வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்
192. வடமோதங்கிழார்
193. வன்பரணர்
194. வண்ணப்புறக் கந்தரத்தனார்
195. வான்மீகியார்
196. விளிச்சியூர் நன்னாகனார்
197. விளியூர் நக்கனார்
198. வீரை வெளியனார்
199. விற்றூற்று மூதெயினனார்
200. வெள்ளாடியனார்
201. வெள்ளி வீதியார்
202. வெண்ணிக் குயத்தியார்
203. வெள்ளெருக்கிலையார்
204. வெள்ளைக்குடி நாகனார்
205. வெள்ளை மாளர்
206. வெறிபாடிய காமக்கண்ணியார்
207. வேம்பற்றூர்க் குமரனார்
இதுவே அகநானூறு, புறநானூறு பாடிய புலவர்கள் பட்டியலாகும்."