உலகிலேயே முதன் முதலாக மிருகங்களை கொண்டு மிகப்ப்பெரிய தத்துவங்களை, எளிதாக மக்களுக்கு அளித்தது பஞ்சதந்திர கதைகள்(These are the forerunner of the present day cartoons);. ஒரு காலத்தில் அமரசக்தி என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனின் மூன்று மகன்களும் மந்த புத்தியோடிருக்க, மன்னன் கவலையுற,அவனின் மந்திரி சுமதி"கவலைப் பட வேண்டாம். இவர்களை விஷ்ணுசர்மாவிடம் அனுப்புங்கள்" என்றான். அவர் அப்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்த நீதி போதனைகளே பஞ்சதந்திரம். ஆறே மாதத்தில் அரசனே வியக்கும் அளவிற்கு, அவர்கள் நிர்வாக திறமையில் சிறந்து விளங்கினர்."தந்திரம்" என்றால் ராஜ நீதி. அவைகள்--மித்ரபேதம், மித்ரலாபம்,காகொலூக்ய, லப்தப்ரநாச, அபரிக்ஷிதகாரக. இது நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என சிலர் கூறுகின்றனர். இதை 200 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர். புனித பைபிளுக்கு பிறகு, மிகவும் பரவலாக பேசப்படும் நூல் இது. சிலர் இதை மகத நாட்டில் எழுதப்பட்டது என்றும், வேறு சிலர் காஷ்மீரத்தில் என்றும் கூறுகின்றனர். ஆனால் அரசன் அமரசக்தி தக்ஷிணத்திலுள்ள மஹிலரோப்ய நாட்டை ஆண்டவன்.அவன் காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்புகின்றனர்.இதை கி.மு.200 எழுதப்பட்ட நூல் என சொல்லுகின்றனர். இது ஸமஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட நூல். முதலில் கி.பி 531-575 பாரசீக மன்னன் கோஸ்ரு தன் புலவர் புர்யோவிடம்இதை மொழி பெயர்க்க சொன்னார். கி.பி 570 புலவர் பட்((BUD) என்பவர், இதை சிரிய மொழியில் மொழி பெயர்த்தார். அராபிய மொழியில் கி.பி.750ல் அப்துல்லா இபால் மோகஃப்ப என்பவர் செய்தார். இதிலிருந்து தான் கி.பி1080ல் கிரேக்கம், கி.பி1100ல் ஹிப்ரு, கி.பி1270ல் லத்தீன், கி.பி1480ல் ஜெர்மானியம்,கி.பி1582ல் இத்தாலிய, கி.பி 1678ல் piரெஞ்சு மொழிகளில் வந்தன. இரண்டு வடிவங்கள் கிடைக்கின்றன-- காஷ்மீரத்தில் இதை "தந்த்ராக்யாயிகா" என்பர். இதே போல் வந்தவை கதாசரிதசாகர, ப்ரஹத்மஞ்சரி. ஸமஸ்க்ருத பதிப்பு கிடைப்பது மிகவும் துர்லபம். பல மாற்றங்களும் உண்டு. கதைக்குள் கதை யிருப்பதாலும், வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை எளிய முறையில் கூறியிருப்பதாலும் பஞ்சதந்திரம் எல்லோராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது.
இந்நூலின் முதற்பெயர் "கரதக, தமனக"!!!!!!
1) மித்ரபேதம்;;;; மஹிலாரோப்ய நாட்டில் வர்த்தமானன் என்ற ஒரு நல்ல வணிகன் இருந்தான். ஒருநாள் இவன் நான்கு வேலையாளுடன் வியாபர நிமித்தமாக வெளீயே செல்ல, வண்டி மாட்டின் கால் உடைய, அவன் தன் வேலையாட்களிடம் மாட்டைப் பார்த்துக் கொள்ள சொல்ல,சென்று விட்டான். மாட்டின் பெயர் "சஞ்சிவிக". அவர்களும் அதை விட்டு விட்டு போயினர். மட்டின் கால் குணமடைய, அது காட்டில் நல்ல தீனி தின்று, கொழுத்து தினமும் பெரிதாக ஏப்பம் விடும். இந்த காளையின் ஏப்ப சப்தத்தைக் கேட்டு, அந்த காட்டின் அரசன் "பிங்கலக" என்ற சிங்கம் நடு நடுங்கினான்,பயந்து வெளீயே வரவில்லை. அவனின் மந்திரி ஒரு நரியாகும். அந்நரியின் மகன்கள் " கரதகன்,தமனகன்" மிகவும் புத்திசாலிகள். தமனகாவிற்கு சிங்கம் ஏன் வருத்தாமாயிருக்கிறது என்பதை அறிய ஆசை.அனால் கரதகன் அவனிடம் "பிறர் விஷயங்களில் தலையிடாதே" எனக் கூறி ஒரு கதை சொல்லியது.
(A) கோவில் கட்டுமான பணிக்காக பல தச்சர்கள் மரங்களை அறுத்து வந்தனர். சாப்பாட்டு நேரம் வர,ஒரு தச்சன் பாதி அறுத்த மரத்தில் ஆப்பு வைத்து விட்டு சென்றான். பக்கத்திலிருந்த குரங்கு ஒன்று அங்கே விளையாட,அறியாமல் ஆப்பை எடுக்க, அதன் வால் மாட்டிக் கொண்டு அது தவித்தது. ஆக விஷயம் தெரியாமல் தலை விட்டால் குரங்கு கதி தான் "என்றது. தமனக இதை கேட்டு " அண்ணா, நாம் அரசனுக்கு சோற்றுக்காக மட்டுமே உழைக்கிறோமா? அப்படியெனில் நமக்கும் நாய்களுக்கும் வித்தியாசம் இல்லை. உணவை கண்டதும், ஓடும் குரைக்கும் , நல்ல குணங்களே கிடையாது. அதே யானை, எப்படி கம்பீரமாக நிமிர்ந்து நடக்கிகிறது. உணவை கணடதும், அவைகள் உண்ர்ச்சிகளே காட்டாது. மனிதனிலும் பல சிறந்தவர்கள் இவ்வாறு இருப்பர். எவன் தன் சொந்த முயறசியில், எல்லாம் அடைகிறானோ அவனே சிறந்தவன். பணம் முக்கியமில்லை, புகழ் தான் தேவை. ஆக நாம் மந்திரிகளின் மகன்கள் கட்டாயம் அரசரின் துயர் அறிய வேண்டும். கரதக அசையாததால் இவன் மீண்டும் " எங்கேயும் எதிலும் வெற்றி காண்பது அரிது.மேலே போவது கஷ்டம், ஆனால் கிழே வருவது சுலபம். கல்லை பிரட்டி மேலே கொண்டு போக கஷ்டபடவேண்டும். எவன் பிறரின் கஷ்டத்தை அறிந்து செயல்படுகிறானோ அவனே சிறந்தவன். அரசரின் முகத்தைப் பார்த்தால் பெரிய துயர் தெரிகிறது."என்றது. கரதக " நீ சொல்வது சரியே;ஆனால் எவ்வாறு அவரின் துன்பத்தை அறிவது.? அது மிகவும் கடினம்" என்றான். தமனக " மனிதரில் மூன்று வகை உண்டு; உத்தம, அதம, மத்யம;; அதமன் எதையும், தோல்விக்கு பயந்து தொடங்கமாட்டான். மத்யமன் தொடங்கி, கஷ்டங்கள் வந்தால் ஓடிவிடுவான். உத்தமன், யோசித்து செயல் படுவான். ஆனால் வெற்றி பெறாமல் திரும்பமாட்டான். நேரம், காலம் தெரிந்து, இடம், பொருள், ஏவல் அறிந்து பார்க்க வேண்டியவர்களை பார்த்து தன் செயலில் வெற்றி காண்பான்.ஆக உலகில் முடியாதது எதுவும் கிடையாது. கடல் அலையை பார்த்தால் பயம் வரும், பிறகு குளித்தால் பழகி விடும்; அது போல முயற்சித்தால் வெற்றி நிச்சியம்,"என்றான். கரதக அனுமதி அளிக்க இவன் அரசனை பார்க்க சென்றான். இவன் பவ்யமாக வ்ருவதைப் பார்த்த சிங்கம் சிரித்துக் கொண்டே " எங்கே உன் சகோதரன்.? மந்திரியின் மகன்களாக இருந்து ஏன் என்னை பார்க்க வரவில்லை? என்றது. அதற்கு தமனக " வீரம் மிகுந்த அரசே!! நாங்கள் உங்கள் முன் ஒரு சிறு துரும்பு. சிறு துரும்பும் உதவும் என்பதை இப்பாட்டு கூறுகிறது, என ஒரு பாட்டு பாடியது. அதன் பொருள்:- புல்லை மிதித்து நடந்தாலும் அதுவே பசுக்களுக்கு உணவு. அதே காய்ந்ததும் பல் குத்த, காது குடைய உதவும். பெரிய மனிதர்கள் தங்களின் மேன்மையை கிழே வீழ்ந்தாலும் தக்க வைத்து கொள்வர். தீவட்டியின் தீ, மேல் நோக்கி தான் எரியும். கிழே சாய்த்தாலும், மேல் நோக்கியே எரியும். ஆக எந்த பொருளும் வைக்கும் இடத்தில் வைத்தால் தான் அழகு. ஒட்டியாணம் கழுத்திலோ, வளை காதிலோ அழகாகுமா? நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? தாங்கள் நீர் அருந்த சென்ற போது, ஏதோ நடந்திருக்கிறது. அதான் உங்கள் மனதை கவலைபட செய்துள்ளது." என்றது. சிங்கம் " நீ சொல்வது சரியே. நான் ஏதோ ஒரு மிருகம் ஏப்பம் விடுவதை கேட்டு பயந்துள்ளேன், நான் அதனால், காட்டை விட்டே போக,முடிவு செய்துள்ளேன் " என்றது. தமனக"பார்ப்பது, கேட்பது சில சமயம் நம்பகூடியதாக இருக்காது. எனக்கு ஒரு நரியின் கதை ஞாபகம் வருகிறது.
(B) ஒரு நரி சாதாரண முரசை பெரிய கொழுப்புள்ள மிருகம் என நினைத்து அதன் அருகில் சென்று அதை கிழிக்க ,அது வெறும் தப்பட்டை என அறிந்தது. அது போல தெரியாமல் முடிவுக்கு வரவேண்டாம் " என்றது. சிங்கமும் அதனிடம் "சென்று பார்த்து வா"என சொல்ல அது கஷ்டப்பட்டு சஞ்சிவிகனை கண்டு ப்டித்தது. முதலில் காளை சிங்கத்தை பார்க்க பயப்பட, இது நேசமாக பேசி அழைத்து வந்தது. சிங்கம் மகிழ்ந்து, சஞ்சிவிகனுடன் நட்பு கொண்டது. சில காலம் செல்ல அவை இரண்டின் தோழமை அதிகரிக்க, சிங்கம் தன் ராஜ்ஜியத்தை மறந்தது. இதனால் எல்லா மிருகங்களும் கஷ்டப்பட்டன. இரண்டு நரிகளும் நம்மால் தான் இப்படி ஆயிற்று என வருந்த. தமனக எப்படி நாமே வீழ்ச்சியை வரவழைத்து கொள்கிறோம் என்பதற்கு ஒரு கதை கூறியது.
(C)சாது தேவஸர்மாவிற்கு திருடர்களை கண்டால் பயம். ஆகையால் பணத்தை, அணியும் துணிகளில் மறைத்து வைத்தான். ஆஷாடபூதி என்ற திருடன் இதை அறிந்து, அவரிடமே வேலைக்காரனாக சேர்ந்தான். உண்மையானவன் போல் நடித்தான். அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக,இவரும் நம்பி ஒரு நாள் குளிக்க செல்ல வழியில் இரண்டு ஆடுகள் சண்டை போடுவதை பார்த்தார்.நடுவில் வந்த நரி ஆடுகளின் ரத்தத்தைப் பார்த்து, நக்கி மகிழ, இன்னும் கொஞ்சம் குடிக்க ஆசைப்பட்டு, ஆடுகளின் நடுவே நிற்க அது நசுங்கி இறந்தது. இதை பார்த்த பிறகு வணிகன் வீடு செல்ல அங்கே இவனின் வேலைக்காரன் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டான். இந்த கதையை ரசித்த பிறகு அவர்கள் விவாதிக்க, தமனக கூறினான் " புத்திசாலிதனத்தால் எதையும் வெல்லலாம்". அதற்குமொரு கதை இவன் சொல்ல:-
(D) " ஒரு மரத்தின் மேல் ஒரு காகம் தன் மனைவியுடன் இருந்தது. கீழே ஒரு நாகம் இருந்தது. காகம் முட்டையிட, பாம்பு அவர்கள் அறியாமல் அதை தின்றது. காகங்கள் அதை கண்டுபிடிக்க, அதை தவிர்க்க என்ன வழி என்று யோசிக்க அவ்வழி வந்த நரி இவர்களின் கதையை கேட்டு அது ஒரு கதை கூறிற்று
(E)" ஒரு குளத்தில் ஒரு கொக்கு வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தது. அதை கண்ட, ஒரு நண்டு என்ன விஷயம் என கேட்க கொக்கு " ஒரு செம்படவன் இன்னும் இரண்டு நாளில் வலை கட்டி இங்குள்ள மீன்களை பிடிக்க போகிறான். அது தான் வருந்துகிறேன் " என்றது. இதை கேட்ட மீன்கள் வெளியே வந்து, தங்களை காப்பாற்றும்படி கேட்ட்டது. கொக்கு ஆகட்டும் என சொல்லி தினமும் ஒவ்வொரு மீனாக எடுத்துச் சென்றது.வழியில் அவைகளை தின்று வந்தது;; நண்டிற்கு சந்தேகம் வர, அது என்னையும் அங்கு அழைத்து செல் எனக் கேட்டது. கொக்கும் வேறு வழியில்லாமல், அதை அழைத்துச் செல்ல அங்கே நண்டு வெறும் மீன்களின் எலும்பு துண்டுகளை பார்த்ததும், விஷயம் புரிய கொக்குடன் சண்டையிட்டு, அதை கொன்றது. இக்கதையை கேட்ட காகம் மகிழ்ந்து வழி என்ன என்று கேட்க, நரி " இங்கே குளிக்கவருபவர்கள் நகை அணிந்து வருவர். நீ ஒரு நகையை எடுத்து பாம்பின் பொந்தில் போட்டு விடு பிறகு வேடிக்கையை பார்" என்றது. காகம் அதே போல் செய்ய, வழிப்போக்கர்கள் நகையை பாம்பின் பொந்தில் பார்க்க அதை அடித்துக் கொன்றனர். இதை கேட்ட கரதகனுக்கு காளை , சிங்கம் பிரிப்பது சுலபம் என தெரிந்தது. தமனக இன்னும் ஒரு கதை கூறினான்.
(F) "மதோத்கதன் என்றொரு சிங்கம் காட்டில் மிருகங்களை துன்புறுத்தி வந்தது. தொல்லை தாளாமல் மிருகங்கள் சிங்கத்திடம் " எங்களை தொந்தரவு செய்யாதே. தினமும் ஒருவர் உனக்கு உணவாக வருகிறோம்" என்றனர்.அது போல் பல நாட்கள் நடந்து வந்தது; அன்று புத்திசாலியான முயலின் தினம். அது வேண்டும் என்றே தாமதமாகச் செல்ல சிங்கம் கோபத்துடன்" ஏன் தாமதம் "என வினவ முயல் நடுங்கி கொண்டே " வரும் வழியில் இன்னொரு சிங்கம் பார்த்தேன்" என்றது. சிங்கம் ஆத்திரத்துடன் எங்கே என்று ஓடி வர முயல் ஒரு கிணற்றைக் காட்டியது. சிங்கம் எட்டி பார்த்து தன்னுடைய ப்ரதிபிம்பத்தை, மற்றொரு சிங்கம் என நினைத்து, கிணற்றில் குதித்து இறந்தது. இதன் பிறகு கரதகன் தமனகாவை, சிங்கத்திடம் அனுப்பினான்.அங்கே தமனக, சிங்கத்திடம் " மாடுகள் உழத் தான் லாயக்கு அதை நாம் மந்திரியாக வைத்திருப்பது தவறு " என்றது. ஆனாலும் சிங்கம்,தன்னை மாற்றி கொள்ளவில்லை.ஆனாலும் தமனக, விடாமல் ஒரு கதை சொன்னான்.
(G) " மந்தஸ்வரூபினி என்ற கரப்பான் ஒரு அரசனின் படுக்கையில் வாழ்ந்து வந்தது. அதை ஒரு மூட்டைபூச்சி நண்பனாக்கி கொள்ள, ஒரு நாள் மூட்டைபூச்சி அரசனைக் கடித்து ஓடிவிட, சேவகர்கள் வ்ரும் போது கரப்பான் இருக்க, அதை அடித்துக் கொன்றனர்". இந்த கதையை கேட்டும், சிங்கம் மசியாததால் தமனக எருதிடம் சென்றான். அதனிடம் " நாம் சிறியவர்கள்.நமக்காக நமது தலைவர் என்ன செய்துள்ளார். பெரியவர்களின் நட்பால், நம்மை போன்ற சிறியவர்கள் கஷ்டப்படுவர்" என்றது. இதை ஆமோதித்த எருது ஒரு கதை சொல்லியது;
(H)" ஒரு காட்டில் மதோத்கத என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. அதற்கு ஒரு புலி, நரி, காகம் என மந்திரிகள் இருந்தனர். ஒரு நாள் இவர்கள் காட்டில் செல்லும் போது ஒரு ஒட்டகத்தை கண்டனர். இவர்கள் இது வரை பார்க்காததால் ஆச்சர்யம் அடைய, அதை சிங்கத்திடம் அழைத்து சென்றனர். ஒட்டகத்தை, சிங்கத்திற்கு பிடிக்க, இருவரும் நண்பர்களாயினர். இதனால் காட்டில் மிருகங்கள் கஷ்டபட, மந்திரிகள் ஒரு வழி செய்தனர்.அதன்படி சிங்கத்திடம், ஒட்டகத்தை அடித்து கொல்ல சொன்னார்கள். அது மறுக்க, காகம் " என்னை கொன்று தின்னுங்கள் " என்றது. அதே போல் நரி, புலி கூறியும் சிங்கம் மறுக்க, ஆனால் ஒட்டகம் சரி என்று கூறியதும் நரியும், புலியும் பாய்ந்து அதை கொன்றனர். ஆக நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார், என அரசனுக்கு தெரிய வேண்டும், என்னைப் பற்றி யாரோ தவறாக கூறியதால், சிங்கம் கோபமாக உள்ளது. நான் மனசாட்சிக்கு விரோதமாக நடக்கமாட்டேன், ஆனல் தற்காப்பிற்காக அல்லது எதிரிகளை கொல்ல நான் தயங்கமாட்டேன் " என்றது. இதற்கு தமனக " எதிரிகளின் பலம் தெரியாமல் நாம் சண்டையிடக்கூடாது. ஒரு கதை சொல்லுகிறேன் என:-
(I) " ஒரு நீர் பறவை தன் குடும்பத்தோடு கடல் அருகில் வாழ்ந்து வந்தது. ஒரு முறை பெண் பறவை முட்டையிடும் நேரம் வர, அது ஆணிடம் "எங்கே இடுவது "என கேட்க, அது"கடலுக்கு நம்மிடம் தைரியம் கிடையாது. ஆகையல் நீ இங்கேயே முட்டையிடு " என்றது. பெண் யோசிக்க, ஆண் " நான் தான் உன்னுடைய நெருங்கிய உறவினன். நான் சொல்வதை கேள் " எனக் கூறி ஒரு கதை சொல்லியது.
(K)" ஒரு குளத்தில் சங்கட, விகட என்று இரண்டு அன்னங்கள் இருந்தன. அவைகளோடு ஒரு ஆமை வாழ்ந்து வந்தது. ஒரு சமயம் நீர் குறைய, எல்லாம் வேறு குளம் போக, ஆமை தங்கிவிட்டது. அதனால் பறக்கமுடியாததால்,அன்னங்கள் உதவ வந்தன. அவைகள்
அதனிடம் "எக்காரணம் கொண்டும் வாயை திறக்கூடாது " எனக் கூறி ஒரு குச்சியை, அதை தன் வாயால் பிடித்துக் கொள்ள சொல்லி, இரண்டும் குச்சியின் முனைகளை பிடித்து கொண்டு பறந்தனர்.கிழே சிறுவர்கள் இதை பார்த்து சிரித்து சப்தமிட,ஆமை கோபத்தில் வாயை திறந்து திட்ட கிழே விழுந்து இறந்தது. நல்ல நண்பர்களின் வார்த்தையை கேட்காததால் இந்த கதி என முடித்து மற்றொரு கதையும் கூற:-
(L)ஒரு குளத்தில் அநாகத, உத்பன்னமதி, யத்பவிஷ்ய என மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. ஒரு சமயம் செம்படவன் வலை விரித்து பிடிக்க வர, அநாகத கூறியது " நாம் வேறு குளம் செல்வது நல்லது"என்றது. மற்ற இரண்டும் கஷ்டம் வரும் போது பார்த்து கொள்ளலாம் எனக் கூறியது. அநாகத நீர் ஓட்டத்தில் வேறு குளம் சென்று அடைய, மற்ற இரண்டும் மாட்டிக் கொண்டது. அச்சமயம் உத்பன்னமதி இறந்தது போல் பாசாங்கு செய்ய, செம்படவன் அதை கவனியாத நேரத்தில் ஈர மண்ணில் புகுந்து தப்பித்தது. ஆனால் யத்பவிஷ்ய மாட்டிக் கொண்டு இறந்தது". ஆகையால் நீ முட்டையிடு என்றது ஆண்பறவை . ஆனால் முட்டைகளை கடல் நீர் அடித்துச் செல்ல ஆண் பறவை எல்லா பறவைகளையும் கூப்பிட்டு, நடந்ததை கூறிற்று. அவைகள் தலைவர் கருடனிடம் கூற, அது விஷ்ணுவிடம் கூற, அவர் வருணனைக் கூப்பிட்டு, முட்டைகளை கொடுத்து விடுமாறு சொன்னார். இதை சொல்லி விட்டு தமனக சிங்கத்திடம் எருதைப் பற்றி பல பொய்கள் கூற இரண்டிற்கும் பகை வளர்ந்தன.இதை கேட்ட கரதகன் " நீ செய்தது சரியல்ல. ஸாம, தான,பேதம், தண்டம், என்ற நான்கு வகைகளில் பேதம் கடைசியல் உபயோகிக்கவேண்டும். அதற்கு ஒரு கதை உண்டு என சொல்ல
(M)" ஒரு வணிகனுக்கு இரண்டு புதல்வர்கள் --தர்மபுத்தி, துஷ்டபுத்தி. ஒரு முறை இருவரும் காட்டு வழியில் செல்ல, தர்மபுத்தி அங்கே ஒரு புதையல் கண்டான்.துஷ்டபுத்தி அவனிடம் "இதை இங்கேயே புதைத்து விடுவோம். ஊருக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம்"என்றான். தர்மபுத்தியும் ஒத்துக் கொண்டு செல்ல,இரவோடு இரவாக, துஷ்டபுத்தி புதையலையை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். மறு நாள் இருவரும் வந்து தோண்ட, புதையல் இல்லை. அரசனிடம் முறையிட்டனர். அரசன் சாட்சி இருக்கிறதா, என வினவ இருவரும் மரம் தான் சாட்சி என்றனர். அரசன் அவ்வாறெனில் இருவரும், மரத்தின் கிழே உங்களுடைய நிலமையை விளக்கி, சுடும் எண்ணையில் கையை விட வேண்டும் என்றான். இதன் நடுவில் துஷ்டபுத்தி, தன் தந்தையிடம் மரம் பேசுவது போல் நீ நடிக்கவேண்டும் என்றான்.அதற்கு அவர் " நீ உபாயம் செய்யும் போது அதனின் கஷ்டங்களையும், அபாயங்களையும், உணர வேண்டும். எவ்வாறெனில் என்று ஒரு கதை சொன்னான்:- (N)"ஒரு காலத்தில் நாரை தன் குடும்பத்தோடு ஒரு மரத்தில் வாழ்ந்து வந்தது. இவை முட்டையிட கிழே உள்ள நாகம் அவைகளை தின்று விடும். வழி அறிய, நாரை நரியிடம் செல்ல, அது கூறியது " மரம் அருகிலேயே கீரி வாழ்கிறது. நீ தினமும் மீன்களை வரிசையாக அதன் இடத்திலிருந்து, பாம்பு பொந்து வரை போடு. கீரி மெல்ல, பாம்பு பொந்து வரும், பிறகு நீயே பார்த்துக் கொள் " என்றது. நாரை அவ்வாறே செய்ய, கீரி, பாம்பு பொந்து வர பாம்பைக் கொன்றது. ஆகையால் நான் தீய செயல்களுக்கு உடைந்தையாக மாட்டேன்" என்றார் தந்தை. ஆனால் துஷ்டபுத்தி தொந்திரவு செய்ய ஒப்புக் கொண்டார். மறு நாள் அரசன் மந்திரிகள் சகிதம் வர, மரத்தை கேட்டனர். பாவம் தந்தை பொய் சொல்ல, தர்மபுத்தி " இது பேய். மரத்திற்கு புகையிடவும். இந்த பேய் போய்விடும் என்றான். அரசன் ஒப்புக் கொண்டு சேவகர்கள் புகையிட, அவனின் தந்தை வெளி வர உண்மை விளங்கியது;;கரதகன் இதை கூறி "சிங்கம் எருது இருவருமே, நல்லவர்கள்.அவர்களுக்கு நாம் தீங்கு செய்யக் கூடாது. நாம் கொடியவர்களுக்குத் தான் தீங்கு செய்ய வேண்டும் என மற்றொரு கதை கூறியது .
(O) " ஒரு வணிகன் தன் நண்பனிடம் "நான் க்ஷேத்திராடனம் செல்லுகிறேன். நீ இந்த 1000 எடையுள்ள இரும்பை பத்திரமாக பார்த்துக் கொள்" என சொல்லி சென்றான். திரும்பி வந்து, வினவ நண்பன் " எல்லாவற்றையும் எலிகள் தின்று விட்டன " என்றான். அவன் பொய் சொல்லுகிறான் என அறிந்ததும், இவன் சென்று விட்டான். எப்படியோ நண்பனின் மகனை வசப்படுத்தி தன் வீட்டில் பூட்டி வைக்க, அவனின் நண்பன் இவனிடம் கேட்க இவன் " கழுகு பையனை எடுத்துச் சென்றதாக கூறீனான். நண்பன் இதில் ஏதோ விஷ்மம் இருப்பதாக உணர்ந்து, அரசனிடம் முறையிட்டான். அரசன் கேட்க, அவன் அதே பதிலை சொன்னான். சபையில் எல்லோரும் சிரிக்க, அரசன் " இது எவ்வாறு சாத்தியம்" என வினவ, அதற்கு அவன் " இந்நாட்டில் 1000 எடை இரும்பை எலிகள் தின்றுள்ளன. அதனால் இதில் ஒன்றும் ஆஸ்சிசர்யபட தேவையில்லை" என்றான். அரசன் பிறகு விஷயமறிந்து, அவனிடமிருந்து இரும்பை பறித்து பிள்ளையை மீட்டான். ஆக ஒரு தப்பிற்கு, மற்றொரு தப்பு பிழையில்லை என கரதகன் கூறினான். ஆனாலும் தமனக தன் போட்ட,
திட்டத்தின் படி சிங்கம் எருது இரண்டையும் மோத விட, எருது இறந்தது.சிங்கம் முன்போல் வாழ்ந்தது;;
2) மித்ரலாபம்;;;;;; வெகு காலம் முன்பு ஒரு மரத்தில் லகுபதனக, என்ற காகம் வாழ்ந்து வந்தது. மரத்தின் அருகில் வேடன், வலை கட்டி பறவைகளை பிடிக்க திட்டமிட்டிருந்தான். புறாக்கள் மாட்டிக் கொண்டும், வலையோடு, வானத்தில் பறந்து சென்றன. காகமும் அவர்களுடன் சென்றது. அவைகளின் தலைவன் காகத்திடம் : உனக்கு உண்மையான நண்பனை காட்டுகிறேன் என்றது;;நேராக அவன் தன் நண்பன் "ஹிரண்யகன்" என்ற எலியிடம் செல்ல அவன் தன் பற்களால் கடித்து, அத்தனை பறவைகளை மீட்டது. எலியின் செயலை கண்ட காகம், அதனுடன் நட்பு வைத்துக் கொள்ள ஆசைபட, முதலில் மறுத்த எலி பிறகு ஒப்புக் கொண்டது. காலம் செல்ல ஒரு நாள் காகம் எலியிடம் " நான் என் நண்பன் வாழும் இடம் செல்லப் போகிறேன் " என்றது.அதோடு தன் நண்பன் ஆமை(மந்தர) தனக்கு தினமும் மீன் வகைகளை அளிப்பான் என்றது. எலியும், வரேன் என சொல்ல, இரண்டும் ஆமையிடம் சென்றன. ஆமை எலியிடம் "ஏன்? நீ உன்னுடைய இடத்தை விட்டு இங்கு வந்தாய் " என வினவ, எலி " நான் சூடாகரணன் என்னும் சந்நியாசியுடன் இருந்தேன்.அவர் சாப்பிட்ட பிறகு எனக்கு மீதி உணவு வைப்பார். அதை உண்பேன். பல காலம் இவ்வாறு நடந்தது. ஒரு நாள் விநாகர்ணன் என்ற சந்நியாசி இவருடன் சேர, இருவரும் புராணங்கள் படித்து மகிழ்ந்தனர். படிக்கும் போது சூடாகரணன், தன் பக்கத்திலுள்ள வில்லை சுண்டுவான். தினமும் இதை செய்ய அவரின் நண்பன் "ஏன் " என வினவ அதற்கு அவர் " எலியை விரட்ட" என்றார். மழை இல்லை என்றால் நதிகளும் வறண்டு போகும். செல்வம் உள்ளவனிடமே நண்பர்கள் இருப்பர். ஆக எனக்கு உணவு இல்லை என தெரிந்ததும் நான் வந்து விட்டேன்" என்றது. அதோடு நல்ல நண்பர்கள் முக்கியம் என்றும் கூறியது. மூவரும் இப்படி வாழும் சமயம், ஒரு நாள் "சித்ராங்கதா" என்ற மான் வேடனின் வலையிலிருந்து தப்பி வந்து, இவர்களுடன் நண்பனாயிற்று. ஒரு நாள் மறுபடியும் மான் வலையில் சிக்க, காகம் வந்து சொல்ல, எலி ஓடி வலயை கடித்து மானை மீட்டது. அச்சமயம் ஆமை மெதுவாக அங்கே வர, இவர்கள் கோபிக்க, வேடன் வர, இவர்கள் ஓடிப் போயினர். ஆனால் ஆமை மாட்டிக் கொண்டது. அதை மீட்க இவர்கள் தந்திரம் செய்தனர். சற்று தள்ளி மான் இறந்தது போல் விழ, காகம் அதன் மேல் உட்கார்ந்து கொத்துவது போல் செய்ய, இதை பார்த்த வேடன், மானை எடுத்து செல்ல வர,எலி ஓடி வலையை கடிக்க ஆமை தப்பியது, அத்தோடு, எல்லோருமே தப்பித்தனர். நல்ல நண்பர்களுக்கு இது தான் அடையாளம்.
3) சந்தி விக்ரஹம்:::: ( சமாதானமும் சண்டையும்);; காகங்கள் ஒரு மரத்தில் வாழ்ந்து வந்தன.அதன் தலைவன் மேகவர்ணன்;; சற்று தள்ளி ஒரு மரத்தில் "அமரதனம்" என்ற தலைவனின் கிழ் பல ஆந்தைகள் வாழ்ந்தன. இவர்களுக்குள் பகை மூள, ஆந்தைகள் காகக்கூட்டத்தை போரிட்டு அழித்தன. மேகவர்ணன் தன் மந்திரிகள் உத்தீபிகன், ஸந்தீபிகன், சிரஞ்சிவி இவர்களுடன் கூடி ஆலோசனை செய்ய, உத்தீபிகன் " நாமோ எளியவர்கள். நமக்கு உதவ யாரும் இல்லை. ஆக இவ்விடத்தை விட்டு போக வேண்டியது தான் " என்றது." நாய்கள் தான் பயந்து அவ்வாறு செல்லும்" என்றான் ஸந்தீபிகன். சிரஞ்சிவி பேசாமலிருக்க அரசன் வினவ அவன்
" இதற்கு காரணம் நம் வாய் தான்" என்று ஒரு கதை கூறிற்று:-
(A) "ஒரு காலத்தில் ஒரு கழுதை வண்ணானிடமிருந்தது. அதற்கு உணவு அளிக்க அவனால் முடியாது போக, அவன் அதற்கு புலித் தோல் போர்த்தி விட்டு வெளியே அனுப்ப, வழியில் எல்லோரும் புலியென நடுங்க, கழுதை பல வயல்களில் மேய்ந்து, உணவு உண்டு வாழ்ந்தது. ஒரு குடியானவனுக்கு சந்தேகம் வர, அவன் தன் கையில் வில்லுடன் உடம்பில் போர்வை அணிந்து, கழுதையை பின் தொடர, அக்கழுதை இவனை பெண் கழுதை என எண்ணி தன் சொந்த குரலில் கத்த, அவன் கழுதை என அறிந்து அதை கொன்றான்". சிரஞ்சிவி மறுபடியும்,தான் சொன்னதை வலியுறுத்த ஒரு கதை கூற;;
(B) " ஒரு காலத்தில் பறவைகள் கூடி ஒரு ஆந்தையை அரசனாக தேர்ந்தெடுத்தனர். இதை கண்ட காகம்"பகலில் பார்வை தெரியாத ஆந்தையை தலைவராக எடுத்ததில்,தவறுள்ளது;; திறமையானவர்களை தேர்ந்தெடுப்பது சால சிறந்தது" என்றது; அவர்களிடம் ஒரு கதை கூறியது. அதாவது " ஒரு ஏரி அருகில் பல முயல்கள் வாழ்ந்து வந்தன. பல ஆண்டுகள் வறட்சியால் அப்பகுதிக்கு ஒரு யானை கூட்டம் வந்தன. அவர்களின் காலடியில் பல முயல்கள் இறந்தன. அவைகள் கூட்டம் போட்டு என்ன செய்வது என்று ஆலோசிக்க "விஜய" என்ற முயல் "நான் இதை சமாளிக்கிறேன் " என்றது. இது மரத்தின் மேல் ஏறி அமர்ந்து சப்தம் போட, யானைகள் முயலைப் பார்த்தன. முயல் " நாங்கள் சந்திரனின் ஆட்கள். இந்த ஏரி அவருடையது.நீங்கள் நீரை கலக்கி வீட்டிர்கள். எப்படியோ நீங்கள் இங்கு வந்திருப்பது அறிந்து, அதை பார்த்து வரச் சொன்னார். நான் இதை அவரிடம் சொன்னால், அவரின் கோபத்திற்கு ஆளாவீர்" என்றதும் யானைகள் யாவும் ஓடின. யானைகளுக்கு நல்ல புத்தாசாலியான தலைவன் இல்லாததால் இது நடந்தது எனக் கூறியது. அதே போல் சின்னவர்களிடம் நாம் நம்பிக்கை வைக்கக்கூடாது எனக் கூறி, சிரஞ்சீவி தனக்கு நடந்ததை ஒரு கதையாக சொல்லியது;;
(C)"நான் வசிக்கும் மரத்தின் அடியில் வெகு நாட்களாக "கபிஞ்சல" என்ற பறவை வாழ்ந்து வந்தது. பல நாட்கள் அது வராததால் ஒரு முயல் அந்த இடத்தில் வசிக்க ஆரம்பித்தது. நான் முயலிடம் சொல்லியும், அது அங்கேயே இருந்தது. ஒரு நாள் பறவை வர அவர்களுக்குள் சண்டை வர, அவர்கள் பக்கத்தில் வாழ்ந்த பூனை(ததிகர்ணன்)யிடம் மத்யஸ்யத்திற்காக செல்ல, அது அவைகளிடம் தனக்கு காது கேட்கவில்லை அருகில் வந்து சொல்லுமாறு கூற, இவைகள் நெருங்க பூனை இரண்டையும் தின்றது". ஆக நாம் ஆந்தை போன்றவர்களை தலைவனாக்கூடாது என்றது சிரஞ்சீவி;;.காகங்களும் ஒப்புக் கொண்டன; இதை சொன்னதும் ஆந்தைகள் கோபித்தன. "மரத்தை வெட்டினால் மீண்டும் முளைக்கும். காயம் பட்டால் சில நாட்களில் சரியாகும்". ஆனால் மனம் புண்பட்டதால் காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் பகை உண்டாயிற்று. சிரஞ்சிவி மறுபடியும் ஒரு கதை கூற அதாவது:-
(D) '' யாகம் செய்ய அந்தணன் ஒரு ஆடு வாங்கி சென்றான். சில கயவர்களுக்கு இது தெரிய, அந்த ஆட்டை அடைய ஆசைப்பட்டனர். அவர் வரும் வழியில் ஒருவன் நின்று " என்ன நாய் வாங்கி போகிறீர்கள்" என்றான். சிறிது தூரம் சென்றது மற்றொருவன் " என்ன நாய்
வாங்கி போகிறிர்கள்" என கூற இவருக்கே சந்தேகம் வர, மூன்றாவது ஆளும் அதையே கூற , இவர் ஆட்டை அங்கேயே விட்டு சென்றார். கயவர்கள் ஆட்டை வெட்டி சாப்பிட்டனர். இதை போல் பல கதைகள் கூறி சிரஞ்சீவி " நான் அவர்களை(ஆந்தைகள்) என் வலையில் விழ வைக்கிறேன் " எனக் கூறி சென்றது. தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, ரத்தத்தை தலையில் தடவிக் கொண்டு ஆந்தைகள் இருக்குமிடம் சென்றது. ஆந்தை அரசனிடம் "நான் மேகவர்ணனின் மந்திரி. ஒரு நாள் உங்கள் பெருமையை என் அரசனிடம் கூற என்னை இப்படி செய்து விட்டார்" என்றது. ஆந்தைகளின் அரசன் தன் மந்திரியை பார்க்க, அவன் (பக) ஒரு கதை சொன்னான்:-
(E)" ஒரு நரி அந்தணன் வீட்டில் உள்ள பசுமாட்டை திருட சென்றது. வழியில் அது ஒரு ப்ரம்ம ராக்ஷஸனை சந்திக்க , அதுவும் அந்தணனை தின்ன போவதாக கூற, இருவரும் அந்த வீட்டை அடைந்தனர். முதலில், யார் போவது என்பதில் சர்ச்சை எழ, சத்தம் அதிகமாக அந்தணன் வெளியே வந்தான். அவனுக்கு விஷயம் புரிந்ததும் இருவரையும் மன்னித்து அனுப்பினான். ஆக விரோதிகளுக்கிடையே பகை நமக்கு நன்மை". என்றது. அரசன் காகத்தை தன்னுடன் வைத்துக் கொள்ள சம்மதித்தான். காகம் நன்றி தெரிவிக்கையில் தான் அடுத்த பிறவியில் ஆந்தையாக பிறக்கவேண்டும் , பிறந்து காகங்களை ஒழிக்கவேண்டும் என்றது. அதற்கு அரசன் " நீ சொல்வது தவறு. யாரும் தன் குலத்தை விட்டு போகக்கூடாது.ஒரு பெண் எப்படி எலியானாள் என்பதை விளக்க அது ஒரு கதை சொல்லியது:-
(F)ஒரு கழுகு ஒரு நாள், ஒரு பெண் எலியை பிடித்து வந்தது.வரும் வழியில் அது நழுவி, ஒரு முனிவரின் கையில் விழ, அவர் அதை பெண்ணாக மாற்ற, அவள் அவரிடம் வளர்ந்து வந்தாள். அவள் பருவம் எய்த, முனிவர் சூரியன் , சந்திரன் முதலானோரை வரன் கேட்க அவர்கள்,தங்களை விட மேகம் தான் சிறந்தவன் எனக் கூறீனர். மேகம், வாயுவே சிறந்தவன் என்றது. வாயு, என்னை தடுக்கும் மலையே சிறந்தது என கூற, இவர் மலையிடம் சென்றார். மலை, என்னையே குடையும் எலியே சிறந்தது, எனக் கூற அவர் எலியிடம் கேட்க, அது பெண் எப்படி வளையில் வாழ்வாள் என கேட்க, அவர் அவளை பெண் எலியாக மாற்றினார்.ஆகையால் யாரும் தன் குலத்தை விட்டுக்
கொடுக்கக்கூடாது" என்றது. சிரஞ்சீவி அவர்களிடம் வாழும் போது, காலையில் ஆந்தைகள் தூங்கும் நேரத்தில், இவன் காய்ந்த மரங்கள், வைக்கோல் போன்றவைகளை சேகரித்து வைத்தது. இரண்டு மாதம் பிறகு ஒரு காலை வேளையில் ஆந்தைகள் உறங்கும் நேரம் இது தீ வைக்க ஆந்தைகள் இறந்தன. மற்ற காகங்கள் மகிழ்ந்தன. அதற்கு சிரஞ்சிவி " பெரிய பதவி அடைய பெரிய மனிதர்கள் பல இன்னல்களை அனுபவிப்பர்". அது போல கஷ்டங்களை எதிர்த்து போராட துணிவு தேவை.அதை விளக்க ஒரு கதை கூறிற்று:-
(G)ஒரு நாகம் கட்டில் தவளைகள் வாழும் இடம் சென்று " நான் தெரியாமல் ஒரு அந்தண சிறுவனைக் கடித்து விட்டேன், அதனால் அவர் என்னை சபித்துவிட்டார். சாப நிவர்த்தி வேண்டுமானால் நீ தினமும் ,உன் எதிரி தவளைகளை உன் முதுகில் சுமந்து செல்லவெண்டும் என, அந்த அந்தணன் கூறியதாக நாகம் கூறீயதை தவளை அரசன் நம்ப, இது தினமும் ஒவ்வொரு தவளையகா எடுத்துச் சென்று தின்றது. கடைசியில் அந்த அரசனையும் தின்றது".ஆக ஒரு எதிரியை அழிக்க அவனை தன் முதுகில் சுமக்க நேரிடும்" என்றது சிரஞ்சீவி. இதை கேட்ட காகங்கள் மகிழ்ந்தன.அதே மரத்தில் பல காலம் ஸந்தோஷமாக வாழ்ந்தன;; இதிலிருந்து அறிவதென்னவென்றால்" நண்பர்களை தேர்ந்தெடுக்கும் முன் அவர்களை பற்றி, நாம் நன்கு அறிய வேண்டும்"
4)லப்த நாசம் :- வாலிமுகன் என்ற குரங்கு தன் சுற்றத்தாரை விட்டு ஒரு நதிக் கரையில் வாழ்ந்து வந்தது.அங்கே நல்ல பழ மரங்கள் இருக்க, இது மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த வந்தது. சிம்சுமாரன் என்ற முதலை, நதியில் நல்ல பழங்கள் மிதப்பதை கண்டு வர, அங்கே குரங்கை கண்டது. இருவரும் நண்பனாயினர். வெகு நாட்களுக்கு தன் கணவன் சிம்சுமாரன் வராததால் கவலை கொண்ட அவனின் மனைவி தன் தோழியை அனுப்ப , அவள்" உன் கணவன் ஒரு பெண் குரங்குடன் சிநேகிதமாக இருப்பதாக கூறினாள். அது வெகுண்டு தான் சுகமில்லாமல் இருப்பதாக் கூறி ஆள் அனுப்ப, ஆண்முதலை சென்று பார்த்தது. முதலையின் வைத்தியன் "உன் மனவிக்கு ஒரு பெண்குரங்கின் இதயம் கொடுத்தால் குணமகும் "எனக் கூறியது. உடனே குரங்கிடம் சென்றது. அது குரங்கிடம் " என் மனைவி உன்னை பார்க்க ஆசைபடுகிறாள், வாயேன் " என்றது. குரங்கும் நம்பி செல்ல, பாதி வழியில் முதலை " என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. வைத்தியர் அதற்கு குரங்கின் இதயம் கொடுக்க்கவேண்டும், என்றார் அதனால் தான் உன்னை அழைத்துச் செல்கிறேன்" என்றது. புத்திசாலியான குரங்கு " ஐயஹோ!! நான் என் இதயத்தை மரத்திலே விட்டு விட்டேன். திரும்பி போய் கொண்டு வரலாமா"என்றது. மக்கு முதலை நிஜம் என நம்பி திரும்பி செல்ல, குரங்கு கரை வந்ததும் " என்னை என்ன மடையன் என்று நினைத்தாயா" இந்த கதையை கேள் " என்றது. (A)"காட்டில் சிங்கத்திற்கு யானையின் ரத்தம் அதிகம் குடித்ததால் வயிற்று வலி வர, அது தன் மந்திரி நரியிடம் " வலி போக எனக்கு கழுதை இதயம் வேண்டும்" என்றது. நரியும் தேடிச் செல்ல, கடைசியில் ஒரு வண்ணான் வீட்டில், ஒரு கழுதையை பார்த்தது. அதனிடம்" நீ இவ்வளவு கஷ்டபடுகிறாய். எங்கள் அரசனிடம் வேலை செயதால் நீ சுகமாக வாழலாம்" என்றது. அதுவும் நம்பி செல்ல, குகையில் சிங்கத்தை பார்க்க, பயந்து ஓட நரி தடுத்து " நீயோ நன்றாக பாடுவாய். அரசனுக்கும் பாட்டு பிடிக்கும். பயப்படாமல் அவர் முன்னால் சென்று பாடு "என்றது. இதுவும் நம்பி, சிங்கம் அருகில் சென்று பாட, சிங்கம் ஒரே அடியில் அதை கொன்றது. பிறகு அது " நான் குளித்து விட்டு வருகிறேன் " என்று செல்ல நரி கழுதையின் இதயத்தை தின்று விட்டது. சிங்கம் திரும்பி வர இதயம் காணாமல் இருக்க , நரியிடம் கேட்க அது கழுதைகளுக்கு, இதயம், கழுத்து கிடையாது என பொய் சொல்லிற்று.இந்த கதையை கூறி ,குரங்கு இனி இது போல் மாட்டிக் கொள்ளமாட்டேன் என்றது;;முதலை வருத்ததுடன் ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டோம் என வருந்தி சென்றது;;
ஆக "உன் கையில் வந்தும், உனக்கு கிடைக்காமல் போவதே" லப்த நாசம்.
5) அசம்ப்ரேக்ஷ்யகாரித;;; இது கூறூவது:-"ஒரு காரியத்தை அதன் விளைவுகளை அறியாமல் செய்தால் வரும் கஷ்டங்கள் பல" என்பதே. கௌடதேசத்தில் தேவசர்மா என்ற அந்தணனுக்கு யக்ஞசேனா என்ற மனைவி இருந்தாள். அவள் கருவுற இவன் "நமக்கு பிறக்கபோகும் மகன் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பான் " என்றான். அதற்கு அவள் "காற்றிலே கோட்டை கட்டக் கூடாது" என ஒரு கதை சொன்னாள். (A)ஒரு சிறுவன் தன் தலையில் மண் பாண்டத்தில் நெல் எடுத்து போய் கொண்டு இருந்தான். அவன் நினைப்பில் "இந்த நெல்லை விற்று ஆடு வாங்குவேன். அதை இனம் பெருக்கம் செய்து மாடு வாங்குவேன். பிறகு நிலம் வாங்குவேன். வீட்டை புதுப்பிப்பேன், பிறகு நல்ல பெண்னை மணப்பேன். மகன் பிறப்பான் அவனுக்கு ஸோமசர்மா என பெயர் வைப்பேன். குழந்தையை விட்டு விட்டு, பால் கரக்க சென்ற என் மனைவியை இப்படி குச்சியால் அடிப்பேன்" என அவன் தன் தலையில்லுள்ள மண் பாண்டத்தை அடிக்க அது விழுந்து நொறுங்கியது. ஆக பகல் கனவு வேண்டாம் என்றாள் அவனின் மனைவி;;. இவனுக்கும் மகன் பிறந்தான். ஒரு நாள் தன் மனைவி நதிக்கரை செல்ல, அச்சமயம் அரசன் கூப்பீடுவதாக ஆட்கள் வர, இவர் வீட்டில் வளர்க்கும், கீரியிடம் சொல்லிச் சென்றார். இவர் சென்றதும் ஒரு பாம்பு வர அதை கண்ட கீரி அதை கொன்றது. அந்தணன் திரும்பி வர வாசலில், கீரி தன் வாயில் ரத்தத்துடன் காண இவர் அது தன் குழந்தையை கொன்று விட்டது என்று எண்ணி கீரியை அடித்துக் கொன்றார். உள்ளே வந்ததும் குழந்தையின் அருகில் ஒரு பாம்பு இறந்து கிடப்பதை பார்த்தார். தான் செய்த தவறை எண்ணி வருந்த யக்ஞசேனா வர, அவளும் தன் கணவனின் முட்டாள்தனத்தை எண்ணி வருந்த அவள் ஒரு கதை சொன்னாள்.(B) "ஒரு அந்தண சிறுவன் வறுமையில் வாடி வந்தான். ஒரு நாள் கனவில்" உன் வீட்டிற்கு மூன்று பிச்சைக்காரார்கள் வருவர். அவர்களை அடித்து நொறுக்கினால் அவர்கள் பண ஜாடிகளாக மாறுவார்கள். நீ அதை கொண்டு வாழாலாம்" என வந்தது. இவன் ஒரு முறை நாவிதனிடம் சென்று மொட்டை போட, அச்சமயத்தில் அவன் வீட்டிற்கு தன் கனவில் பார்த்த மூன்று பிச்சைகாரர்கள் வர, இவன் நாவிதனின் குச்சியை கொண்டு, மூவரையும் அடிக்க மூவரும் ஜாடிகளாக மாறினர். பிறகு சிறுவன் ஜாடியிலிருந்தே ஒரு சவரன் காசு நாவிதனுக்கு வழங்கினான். இதை கண்ட நாவிதன் தானும் மூன்று பிச்சைகாரர்களை, அடிக்க தருணம் காத்துக் கொண்டிருந்தான்.ஒரு நாள் இவன் நினைத்தவாறே, மூன்று பிச்சைகாரர்கள் வர, இவன் அவர்களை அடிக்க, அவர்கள் தப்பித்து, அரசனிடம் முறையிட அவன் நாவிதனுக்கு தூக்கு தண்டணை வழங்குனான்.ஆகையல் "ஒரு காரியத்தை செய்யும் முன் தீர ஆலோசித்து செய்ய வேண்டும்".
இல்லையென்றால் மரணமே நேரிடும் " என்றாள் யக்ஞஸேனா.