ஒடுக்கப்பட்டதை மறந்துவிட்டார்களா?? இன்று..
வைக்கம்
போராட்டத்திற்கு முன்பாகவே தீண்டாமையை எதிர்த்து திருவனந்தபுரம்
சமஸ்தானத்தை எதிர்த்து நடந்த மிகப்பெரிய பாட்டாளி மக்கள் போராட்டமே
தோள்சீலை போராட்டம். தீண்டாமை தான் நாம் கேள்விபட்டது எல்லாம் ஆனால் காணாமை
என்பதும் இருந்துள்ளது(உலகில் எந்த மூளையிலு நடக்காத கொடுமை). பரையைனை
தொட்டலே தீட்டு சாணாரை பார்த்தலே தீட்டு என்று வாழ்ந்த காலம். மிக அதிக
தூரமில்லை நமக்கும் அதற்கும். இது நடந்தது 1800ம் ஆண்டுகளில் இருந்து.
திருவனந்தபுரம் சமஸ்தானம் சட்டமே இயற்றியது இந்த பாகுபாடுகளை வைத்து..
யார்
இந்த சாணர்கள், இவர்களை இந்த பெயர் சொல்லிக்கூப்பிடகூடாது என்று பெயரை கூட
மாற்றிவிட்டனர் நாடார்கள் என்று. ஆனால் இவர்களின் பெயர் சான்றோர்
நாடாள்வர் என்பதே. திருத்துறை பூண்டி வடகாடு கோயிலில் உள்ள கல்வெட்டில்
நாடாவன் என்று இவர்களை நாடாள்வான் என்று குறிப்பிடுகிறது, இது 12ம்
நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு. தூத்துகுடியில் சாத்தான்குளம் கல்வெட்டும்
நாடாள்வன் என்றே குறிப்பிடுகிறது இந்த கல்வெட்டு கி.பி. 1644ம் ஆண்டு
கல்வெட்டு. இப்படி சான்றோர் நாடாள்வான் என்ற குறிப்பிட பட்ட இனம். சான்றோர்
என்று அழைக்கப்பட்டு அதன் பிறகு சாண்றார், சாணார் என்று மருவி வந்ததை பல
அறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இப்படி வாழ்ந்த மக்களையே அதாவது நாடாண்ட
ஒரு பரம்பரையை பார்த்தலே தீட்டு என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
18ம்
நூற்றாண்டின் தொடக்க காலத்தில் திருவனந்த சமஸ்தானம் கொண்டுவந்த சட்டத்தில்
பறையர், புலையர், ஈழவர் போன்றவர்கள் இத்தனை அடி தூரத்தில் இருந்து பேச
வேண்டும் சானார் போன்றோர்கள் கண்ணில் கூட படக்கூடாது (உலகத்தில் இன்று வரை
பார்த்த தீண்டாமைகளின் உச்சகட்டம் இது, பார்க்க கூட கூடாது) இதை மீறினால்
தண்டனை என்று வகுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல கீழ் சாதிமக்கள்
சம்பளம் இல்லாமல் வேலைபார்க்கவும் வைக்கப்பட்டனர் சட்டத்தின் மூலமாக 1814ம்
ஆண்டு.
சமூகத்தின் இப்படிபட்ட கொடூரங்கள்
எத்தனை காலம் தான் தொடரும் இவர்களுக்காக குரல் கொடுத்தவர் தான் வைகுண்ட
சாமி (ஜெயலலிதா இவரின் பூஜைக்கு தான் போயிட்டு இப்பவந்தாங்க) இவர் மக்களை
முழுவதுமாக ஒன்று சேர்த்தார். இவரின் காலத்தில் இவருக்கு பெருமாள் என்று
பெயர் வைத்தபொழுது சமஸ்தானத்தில் இருந்து எதிர்ப்பு வந்து முத்துகுட்டி
என்று பிறகு பெயர் மாற்றினார்கள். இவர் வளர்ந்து தன் இன மக்களுக்காக
போராடினார். இவர் துறவரம் மேற்கொண்டவர் சாமியாக பார்க்கப்பட்டவர், இவர்
இட்ட முதல் கட்டளையே தன்னை பார்க்கவரும் பெண்கள் மேலாடை அணிந்து வர
வேண்டும் என்பது தான். ஆம் கீழ்சாதி மக்கள் மேலாடை அணியக்கூடாது, மார்பை
மறைக்க கூடாது. அதாவது உயர்ந்த மனிதர்கள் முன் திறந்த மார்புடனே இருக்க
வேண்டும். இவராலும் வேலுதம்பியாலும் இந்த சமூகத்தினர் ஒரளவு ஒன்றினைந்தனர்.
வைகுண்டசாமி கைது செய்யப்பட்டார் அதன் பிறகு இனி ஊர் ஊருக்கு சென்று
பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். திரும்பிவந்தவர்
தனது பனந்தோப்புக்குள் சென்றவர் மறைந்துவிட்டார் என்று கூறுகிறார்கள்.
எத்தனை கத்திகள் அவர் உடலை தடவியதோ யாருக்கு தெரியும்..
17ம்
நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலேயேன் இந்தியாவிற்குள் வந்துவிட்டான்,
நாஞ்சில் நாட்டையும் அவர்களின் கிருத்துவ மிஸினரிகள் அடைந்திருந்தனர்.
இவ்வளவு அடக்குமுறைகளையும் கண்ட மக்கள் தனக்கு இந்து மதமே வேண்டாம் என்று
தூக்கி எறிந்துவிட்டு கிருத்துவமததிற்கு மாறினார்கள். அங்கு சென்றாலும்
அவர்களுக்கு விமோசனம் இல்லை என்று நீ மதம் மாறினாலும் தாழ்ந்த சாதி தான்
என்று மதம் மாறிய பெண்களின் மேலாடை கிழிக்கப்பட்டது அடித்து
நொறுக்கப்பட்டனர். பாதிரியார் பிட் அவர்கள் தொடுத்த வழக்கில் பத்மநாபபுரம்
நீதிமன்றம் கிருத்துவர்களாக மாறிய நாடார் இன பெண்கள் மார்பில் துணி
அணியலாம் என்று உத்தரவிட்டார். இதன் பிறகே பலர் மொத்தமாக கிருத்துவ
மதத்திற்கு மாறினார். மானம் முக்கியமா கடவுள் முக்கியமா என்று கேட்டால்
இன்று கூட சொல்லலாம் மானம் தான் முக்கியம். சமூகத்தில் அடக்கி ஒடுக்கி
வைக்க பட்ட மக்கள் என்ன செய்வார்கள் இதுவரை கடைபிடித்த மதத்தை தூக்கி
கடாசிவிட்டு கிருத்துவத்திற்கு மாறினார்கள்.
அத்துடன்
நிற்கவில்லை கொடுமை ஆங்கிலேயேன் தான் ஒவ்வொரு பிரேதசத்துக்கும்
ஏற்றார்போல் சட்டம் கொண்டுவந்து மக்களை ஒன்று சேரவிடாமல் தடுத்தானே.
திரும்பவும் அடக்கு முறை வ்ந்தது தோள் சீலையை அகற்ற உத்தரவிடப்பட்டது
1829ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால். திரும்பவும் அடிதடிகள் இந்த முறை பல
உயிர்கள் காவு வாங்கப்பட்டன எதிர்த்தவர்கள் வெட்டி சாய்க்கப்பட்டனர்.
மன்னன் கை கட்டி வேடிக்கை பார்த்தான். ஆனால் மக்கள் இம்முறை தொடர்ந்து
போராடினர் இவர்களுக்கு ஆதரவாக பிற சமூக மக்களும், கிருத்துவ மிசினரிகளும்
போராட்டத்தில் குத்தித்தன. சென்னையில் இந்த முறை வழக்கு பதிவு
செய்யப்பட்டது 1847ம் வருடம் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அவர்கள்
கிருத்துவத்திற்கு மாறி இருந்தாலும் தோள் சீலை அணிய உரிமை இல்லை என்று
தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கூட சாட்சிகளாக வந்த
நாடார் இனமக்களை 64 அடி தூரம் தள்ளியிருந்தே சாட்சி அளித்தனர். பறையர்
இனமக்கள் 32 அடி தள்ளி நின்று சாட்சி அளித்தனர்.
இதன்பிறகும்
போராட்டம் தொடர்ந்தது. பாதிரியார் பீட்டும் அவரது மனைவியும் இந்த இன
மக்களுக்காக பெரும் தொண்டு புரிந்தனர். கிருத்துவ பெண்களுக்காக தனியாக அடை
வடிவமைத்தும் கொடுத்தனர். இந்த நாடார் இனமக்களின் தொடர்
போராட்டத்திற்குமுன் ஒன்றும் செய்ய இயலாமல் 1855ம் ஆண்டு திருவிதாங்கூர்
சம்ஸதானம் அடிமை முறையை முற்றிலும் ஒழித்து சட்டம் இயற்றியது. இதன்
பிறகும் தோள் சீலை உரிமை மறுக்கப்பட்டு 1859ல் ஜூலை 26ம் நாள் தான்
மன்னரிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது, தோளுக்கு சீலை அணிவது மறுக்கப்பட்ட
பெண்கள் சீலை அணிந்து கொள்ளலாம் ஆனால் மேல் சாதி பெண்கள் அணிவது போல்
அணியக்கூடாது என்று உத்தரவு வந்தது. இது தான் தோள்சீலை போராட்டம்.
ஆனால்
இன்று மக்களின் போராட்டம் வேறுவழியில் சென்று கொண்டிருக்கிறது,
தென்மாவட்டத்தின் இன்றைய சாதிகொடுமைகளுக்கு இவர்களும் காரணம் என்று
அறியும்பொழுது எப்படி இப்படிபட்ட ஒரு வரலாற்றினை மறந்தார்கள் இம்மக்கள்
என்பது புரியவில்லை??? ஏன் இந்த போராட்டத்தை பற்றி தெரியாத அந்த இன மக்கள்
பலர் உள்ளனர். எனது நண்பர் ஒருவரிடம் கேட்டபொழுது அவருக்கும் இதை பற்றி
தெரியவில்லை..
ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்
வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
என்பது
போல் ஒரு காலத்தில் தாங்கள் ஒடுக்கப்பட்டதை மறந்து அதுவும் 1847ல்
சென்னையில் நீதிமன்றத்தில் யாரால் இவர்கள் 64 அடி தள்ளி
நிற்கவைக்கப்பட்டர்களோ அவர்களே 1899ல் கமுதி கோயில் வழக்கில் இவர்களும்
கோயிலுக்குள் வரலாம், நால்வர்ண சாதியில் மேல் வர்ணத்தை சேர்ந்தவர்கள் தான்
சான்றோர் நாடார் என்று சாட்சி சொன்ன தில்லைவால் திட்சீதர்களுக்கு பிறகு
இவர்களுக்கும் வந்துவிட்டதா ஆதிக்க சாதி எண்ணம்..
அரசியல்
மற்றும் ரவுடியிசத்தில் சம்பந்தமில்லாத சாதாரண மக்கள் சிலரும் இதையே
செய்வதனால் வந்த வெளீப்பாடே ஒட்டு மொத்த ஒரு சமூகத்தை நோக்கி நான் எழுப்பிய
கேள்வி.. மற்றவகையில் நாடார்களில் பெரும்பாண்மையாக சாதி பார்க்காத மக்கள்
மேல் எந்த வெறுப்பும் இல்லை எல்லா இடத்திலும் சில புல்லுறுவிகள் இருக்க
தான் செய்கின்றனர், அவர்களை களை எடுக்க வேண்டியதும் நமது பொறுப்பே..
நன்றி
1. அய்யாவழி மக்கள்
2. திருவிதங்கூர் சம்ஸ்தான ஆவணங்கள் Trivadrum.
3. தென் குமரியின் கதை - அ.கா. பெருமாள்
4. பண்பாட்டு வேர்களை தேடி - பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி