Pages

Friday, 27 July 2012

தமிழ் இலக்கிய வரலாறு


 இலக்கு + இயம் = இலக்கியம். இலக்கினை உடையது இலக்கியம்.இலக்கியத்திற்கு "நூல்' என்னும் மற்றொரு பெயரும் உண்டு. கட்டடம்கட்டும்பொழுது கோணல்களைக் கண்டு ணர்ந்து சரி செய்ய "நூல்' இட்டுப்பார்ப்பது மரபு. அதுபோல் தனிமனித, சமுதாய அளவி லுள்ள சிக்கல்களையும் காரணங்களையும் சுட்டிக் காட்டித் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் புத்தகங்களே "நூல்' என்று போற்றப்படும். இத்தகைய நூல்கள் ஒரு நாட்டின் பண்பு நலனைமதிப்பீடு செய்ய உதவும் துலாக்கோலாகச் செயல்படுகின்றது. தமிழ் மொழியில்,மாந்தர் தம் மனக் கோட்டம் தீர்த்து குணக் குன்றில் ஏற்றவல்ல ஏராளமானஇலக்கியங்கள் மின்னி மிளிர்கின்றன. அவற்றை ஒரு பருந்தின் பார்வையில்காணப்புகுவோம்.

கடல் கொண்ட முச்சங்கங்கள்:

மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் முச்சங்கங் கள் வைத்து முத்தமிழ்வளர்த்தனர் நம் முன்னோர். முரஞ்சியூர் முடி நாகராயர், தொல்காப்பியர்,நக்கீரர் முதலான புலவர்களின் நாவில் நவிலப்பட்ட நற்றமிழ் நூல்கள் ஏராளம்!ஏராளம்!!. கி.மு. 2387-இல் கற்பனைக் கும் எட்டாத "பிரளயம்' ஒன்று உலகில்நிகழ்ந்தது. சீற்றம் கொண்ட ஆழிப் பேரலைகள் முன் உலகின் மிக உயரமான இமயமலைகூடக் கண்ணுக்குப் புலனாக வில்லை. வீசி எறியப்பட்ட கடல்பொருள்களில் பலஉயரமான இமயமலையில் சிக்கி, தங்கி, உறைந்து, படிவங்களாக மாறிப் போயுள்ளன. அதன் பின்னர் கி.மு. 504 மற்றும் கி.மு. 306-இல் நிகழ்ந்த அடுத்த இருகடல்கோள்கள் என முப்பெரும் கடல்கோள்கள் தெற்கே பரந்து விரிந்திருந்ததமிழகத்தையே வழித்து வாரிக் கொண்டு போன நிலையில், எண்ணிறந்த பல தமிழ்நூல்களும் கடல்வாய்ப்பட்டு அழிந்தன. முச்சங்க நூல் களுள் சிலவாகியமுதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், பூத புராணம், இசைநுணுக்கம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை, பெருங்கலி, வெண்டாழி, வியாழமாலை, அகவல் என்னும் நூல்கள் பற்றிய குறிப்பு இறை யனார் களவியல் உரை யின்மூலம் வெளிப்படுகின்றது. கடல் கோள் களில் எஞ்சிய நூல்கள் தொல்காப்பியம்,பரி பாடல், நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு,ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியனவே.

எட்டுத்தொகை நூல்கள்

மேற்காண் நூல்களுள் தொல்காப்பியம் நீங்கலான எட்டு நூல்களும், "எட்டுத்தொகை'நூல்கள் எனப்படும். எட்டுத் தொகையின் ஒவ்வொரு நூலும் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத் தொகையுள் "பதிற்றுப்பத்து'என்னும் பத்துச் சேர மன்னர்களைப் பத்துச்சேரநாட்டுப் புலவர்கள்பாடியது.சேரநாடுஎன்பது இன்றையகேரளா! தமிழிலிருந்து தெலுங்கு, கன்னட மொழிகளுக்குப்பிறகுகடைசியாகப் பிரிந்த தென் திராவிட மொழியான மலையாள இலக்கியத்தின் மூத்தநூலான பதிற்றுப்பத்து, தமிழ் எழுத்து வடிவத்திலேயே சங்க எட்டுத் தொகையுள் ஒன்றாக இருப்பது தமிழின் தொன்மையையும், மலையாளத்தின் "பின்மை'யையும் உணர்த்தும் ஆவணம் எனலாம்.

பத்துப்பாட்டு நூல்கள்

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை)என்னும் பத்து நூல்களும் கடல் கோள்களுக்குப் பின்னர் நிறுவப்பட்ட சங்கத்துநூல்கள். இவற்றுள் ஒவ்வொரு நூலும் ஒரு மன்னரை புலவரொருவர் பாடிய பாங்கில்அமைந்துள்ளன. "பேராசிரியர்' (கி.பி.13) என்னும் உரையாசிரியரே இப்பத்துநூல்களையும் ஒன்றாகச் சேர்த்து "பத்துப்பாட்டு' என முதன்முதலில் இனம்காட்டினார். இப்பத்து நூல்களுள் செம்பாகி ஆற்றுப் படை நூல்கள்.இவ்வாற்றுப்படை நூல்கள் இன்றைய "பயண இலக்கியத்தின் முன்னோடி'யாகத்திகழ்கிறது.

திணை இலக்கியங்களும் வீரநிலை இலக்கியங்களும்

பொதுவாக சங்க இலக்கியங்களை அக இலக்கியங் கள், புற இலக்கியங்கள் என இருவகையாகப் பகுக் கலாம். அக நூல்களில் குறிப்பிட்ட எவரின் பெயரும்குறிக்கப்படாமல் அகச்செய்திகளை மட்டும் கூறும் மாண்புகாக்கப்பட்டிருக்கும். அக இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் அடிப் படையில் பாடப்பட்டுள்ளதால்"திணை இலக்கியங்கள்' எனப் போற்றப்படுகின்றன: வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, சழிஞை, தும்பை, வாகை என்னும் போர்முறை களைப் பாடுவதால்புறப்பாடல்கள் "வீரநிலை இலக்கியங்கள்' எனச் சிறப்பிக்கப்படுகின்றன.

காப்பிய நூல்கள்

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் கூறுவன பெருங்காப்பியங்கள். வீடு நீங்கலாக ஏனையவற்றைக் கூறுவன சிறுகாப்பியங்கள்.கி.பி. 2-9- இல் ஐம்பெருங்காப்பியங்களும், கி.பி. 6-16-இல்ஐஞ்சிறுங்காப்பியங்களும் தோன்றின. காப்பிய வகைக்கு வித்திட்ட இளங்கோவடிகளின் சிலம்பும், சாத்த னாரின் மேகலையும் முதல் தமிழ்க் காப்பியங்களாவதோடு பெண்ணின் பெருமை பேணும் காப்பியங்களாகவும் மிளிர்கின்றன. இவற்றோடு சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசியும் சேர்ந்து ஐந்தும்  பெருங்காப்பியங்கள். நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமாரகாவியம், நாககுமார காவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்கள். இவற்றுள்மேகலையும், குண்டலகேசியும் மட்டும் பௌத்த சமயத்தைப் பாட ஏனைய 8காப்பியங்களும் சமணம் போற்றுகின்றது. இது, அக்கால கட்டத்தில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டுகிறது. ஐம்பெருங்காப்பியப் பட்டியலுக்குள் வராவிட்டாலும் பெருங்கதை (கி.பி. 6) பெருங்காப்பிய வரிசையுள் மூன்றாவதாக வரிசைப்படுத்தத் தக்க சிறப்புடையது. கம்பரின் கம்பராமாயணத்தை அடியொற்றிஇரகுவம்சம் (கி.பி. 15), இராமாயண நூல் களுக்கு மறுதலையாக எழுந்த புலவர் குழந்தையின் இராவண காவியம் (கி.பி. 1946) தமிழர்ப் பண்பாட்டைப் பேணுவதற்காகவே எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் கண்ணதாசனின் இயேசு காவிய மும், சிற்பியின் "மௌன மயக்கமும்' கவிஞர்வைரமுத்துவின் "கவிராஜன் கதை'யும் குறிப்பிடத்தக்கன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

காலம் ஏறக்குறைய 4 (அ)-ஆம் நூற்றாண்டு கணக்கு = நூல். 50 முதல் 500 முடியஅதிக அடிகளைக் கொண்ட நூல் மேற்கணக்கு நூல்கள். அவற்றைவிடக் குறைந்தஅடிகளைக் கொண்டவை கீழ்க்கணக்கு நூல்கள். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலைஎன்னும் ஆறும் அகநூல்கள்: பொய்கையார் பாடிய களவிழி நாற்பது மட்டும்புறநூல்: ஏனைய நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம்,முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் 11 நூல்களும் அறநூல்கள். இவற்றுள்திருக் குறள் "உலகப் பொது மறை' என்னும் அரியணை ஏறியது.பதினொண்கீழ்க்கணக்கின் அறநூல்கள் அடியாற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள்எழுந்தன. ஔவையாரின், கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஆத்திசூடி முதலியனவையும் அறநூல்கள். ஔவையின் ஆத்தி சூடியைப் பின்பற்றி பாரதி, பாரதிதாசன் முதல் வாணிதாசன் முடிய ஒன்பதின்மர் "ஆத்திசூடி வகை' நூல்களை இயற்றியுள்ளனர். மேலும், உலகநீதி, நீதிநெறி விளக்கம், பெண் மதிமாலை முதலானவும் அறநூல்களாக அணி செய்கின்றன.

இலக்கண நூல்கள்

இலக்கணம் என்பது மொழியின் வேலி. நமக்கு முழுமையாக கிடைக்கும் முதல் இலக்கணநூல் தொல் காப்பியமே. அகத்தியரை முதன்மைப்படுத்திக் கூறும் மனப் போக்கு,அவரைத் தொல்காப்பியரின் ஆசிரி யர் எனவும், அவரது அகத்தியம்தொல்காப்பியத்தின் மூலநூல் எனவும் கூறலாயிற்று: ஆயின் "அதங் கோட்டாசான்'என்பவரே தொல்காப்பியரின் ஆசிரியர் என்பதனைத் தொல்காப்பியம் பாயிரம் பதிவுசெய்துள்ளது. கி.பி. 5-ஐச் சேர்ந்த தொல்காப்பியத்தைத் தொடர்ந்து பவணந்திமுனிவரின் "நன்னூ'லும் (கி.பி. 12) சொல்லமைப்புகளை ஆராயும் "இலக்கணக்கொத்து'ம் (கி.பி. 17) இயற்றப்பட்டன. தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் அகஒழுக்கங் களைப் பற்றிய இலக்கணங்கள் கி.பி. 8-16-இல் தோன்றின. இவற்றுள் இறையனார் அகப்பொருள் (கி.பி. 8) குறிப் பிடத்தக்கது. ஐயனாரிதனாரின் "புறப்பொருள் வெண்பாமாலை' (கி.பி. 9)-யில் தான் "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துவாளொடு, முன்தோன்றி மூத்தகுடி' என்னும் வரிகள் இழை யோடுகின்றன. செய்யுள்இயற்றுவதற் குரிய யாப்பிலக்கணங்களை அவி நயம் (அவி நயனார்), யாப்பெருங்கலம்மற்றும் யாப்பருங்கலக்காரிகை (அமித சாகரர்)யும், செய்யுள் அணிகளைக் கூறும்தண்டியலங்காரம் (கி.பி. 12) நூலும் எழுந்தன. இத்தாலி நாட்டின ரானவீரமாமுனிவரின் "தொன்னூல் விளக்கம்' ஐந்திலக்கணங்களைக் கூறுவது. தமிழின்யாப்பு வடிவங் களைப் "பாட்டியல் நூல்கள்' நவிலு கின்றன. இவை போக, சொல்லின்பொருள்களை விளக்கும் 67 நிகண்டுகள் தமிழில் உள்ளன என்பர். திவாகரர்இயற்றிய திவாகரம் "முதல் நிகண்டு' எனப் போற்றப்படுகிறது. காலப்போக்கில்நிகண்டுகள் உரைநடை வடிவில் அகராதிகளாக உருமாற்றம் பெற்றன. வீரமாமுனிவரின்"சதுர்அகராதி' புகழ் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி"லெக்சிகன்' எனப்படுகிறது. இலக்கணக் கூறுகளை அகர வரிசையில் வை.மு.கோபாலய்யர் 25 ஆண்டு களாகப் பாடுபட்டு உருவாக்கிய 17 தொகுதிகளைக் கொண்ட"தமிழ் இலக் கணப் பேரகராதி' 2005-இல் வெளியிடப்பட்டது.

தொன்ம இலக்கியங்கள்

தொன்மை வாய்ந்த பழங்கதைகளைக் கூறும் புராணங்கள் கி.பி. 11-இல் தோன்றின.கல்லாடம் சிவ பெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் முதல் புராணநூல்,தொன்மங்களில் பெரியபுராணமும்  (சேக் கிழார்), கந்தபுராணம் (கச்சியப்பமுனிவர்) புகழ் வாய்ந்தன.

சமயங்கள் வளர்த்த தமிழ்

தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஏதாவதொரு சமயப் பெருமையைப் பேச உதவும் கருவியாகவே ஆளப்பட்டு வந்திருப்பது கண்கூடு. பாரதிதாசன்தான் "அழகின்சிரிப்பு' மூலம் இம்மரபினை உடைத்தார் எனலாம். கி.மு. 5-இல் தோன்றியபௌத்தக் கருத்து களை மணிமேகலை, குண்டலகேசி, வீர சோழியம் முதலான நூல்கள்எடுத்துரைக்கின்றன. கி.பி. 3-இல் தோன்றிய சமண சமயப் பெருமையை "ஜைனஇராமாயணம்' மேரு மந்திரபுராணம்' சிலம்பு, வளையா பதி, பெருங்கதை முதலானஇலக்கியங்களும், ஐஞ்சிறு காப்பியங்களும் பேசுகின்றன. கி.பி. 7,8,9-இல்சோழர் கட்டிய சிவாலயங்கள் 63 "நாயன்மார்' மூலம் சைவத்தை வளர்த்தன. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம் முதலான "பன்னிருதிருமுறைகள்' தோற்றம் கண்டன. ஏறக்குறை இக்காலகட்டத்தில் தோன்றிய வைணவம்"பன்னிரு ஆழ்வார்கள்' மூலம் நாலாயிர திவ்விய பிரபந்தங்களைத் தந்தது.மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் மார்கழி மாதப்பாராயண நூல்களாகத் திகழ்கின்றன. வணிகப் பொருட்டு நுழைந்த மேலை நாட்டினருள்இத்தாலியைச் சேர்ந்த ஜோசப் பெஸ்கி செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்மூலம் "வீரமாமுனிவர்' எனப் போற்றப்படுகிறார். இவரது "தேம்பாவணி'யும்" பரமார்த்த குருகதை'யும் சிறப்புடையன. இன்னும் அகராதிகள், ஒப்பிலக்கணங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சுவடிப் பணிகள், கிறித்தவரின்தமிழ்ப் பணிக்குச் சான்றுகளாக நிலவுகின்றன. கி.பி. 14-இல் தமிழகத்தில்படையெடுத்த "மாலிக்காபூர்' மூலம் இஸ்லாமியத் தாக்கம் எழுந்தது. அதன் மூலம்உமறுப்புலவரின் சீறாப்புராணம் தமிழுக்குக் கிடைத்தது. சிற்றிலக்கியங்கள்,சூபி, முனா ஜத்து, நாமா இலக்கிய வகைமைகளில் பல இஸ்லாமிய நூல்கள்இயற்றப்பட்டன. நபிகள் நாயகம் வரலாற்றை அப்துல் ரஹீம் "நாயகம் காவியம்'எனவும், கவிஞர் மேத்தா "நாயகம் ஒரு காவியம்' எனவும் காப்பியங்களாக்கியுள்ளனர்.

சிற்றிலக்கியங்கள்

மாலிக்காபூரின் படையெடுப்பும், விஜய நகரப் பேரரசின் ஆட்சிமுறையும் காப்பியசருவாக்கங்களை நிறுத்தித் தனி மனிதப் போற்றலை வளர்த்தன. இதன் விளைவாக 96வகைச் சிற்றிலக்கியங்கள் தோற்றம் கண்டன. ஆற்றுப்படை, பிள்ளைத் தமிழ், உலா,தூது, கலம்பகம் முதலாயின அவற்றுள் சில.

சித்தர் இலக்கியங்கள்

அணிமா, மகிமா, கிரிமா, இலகிமா, பிராப்தி, பர காமியம், ஈசத்துவம்,வசித்துவம் என்னும் எட்டுவகைச் சித்துக்களில் வல்லவர்கள் சித்தர்கள். 18,108, 1008 என்னும் எண்சிறப்பு முறை அடிப்படையில் "பதினெண் சித்தர்கள்' எனவரையறுக்கப் படுகின்றனர். திருமூலர், சிவாக்கியர், பட்டினத்தார் முதலானோர்அவர்கள். இவர் தம் நூல்களில் மெய்யுணர்தலும், இரைத் தேடலும், மருத்துவ,பச்சிலைக் குறிப்புகளும் பொதித்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்

மேலை நாட்டினர் தொடர்பால் இந்நூற்றாண்டில் இலக்கியங்கள் பன்முகப்பார்வையுடன் பல்வேறு வகைமைகளுக்குத் தோற்றம் தந்து ஏற்றம் கண்டு வருகின்றன. பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், சுரதா,கண்ணதாசன் முதலானோருடன் சிற்பி, வைரமுத்துவின் மரபுக் கவிதைகள் இருபதாம்நூற் றாண்டின் தொடக்க காலத்தை அணி செய்தன. வீரமா முனிவரின் (கி.பி. 18)பரமார்த்த குருகதை "தமிழ்ச் சிறு கதைகளின் முன்னோடி'யாகத் திகழ்கிறது.வ.சே.சு. ஐயரின் குளத்தங்களை அரசமரம் "முதல் தமிழ்ச் சிறு கதை' எனலாம்.புதுமைப்பித்தன், கல்கி, ஜெயகாந்தன், கு.ப.ரா. இராஜம்கிருஷ்ணன் முதலானோர்சிறுகதை உல கில் தடம் பதித்தவர்கள். பத்திரிகைகளின் வாயிலாகப் பெருகியசிறுகதைகள் "அரைப்பக்கச் சிறுகதை'களைக் கண்டு "ஒரு நிமிடச்சிறுகதை'களையும் ஈன்றெடுத் துள்ளன. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "பிரதாபமுதலியார் சரித்திரம்' (1879) தமிழின் முதல் புதினம். இராஜம்ஐயர்,அ.மாதவையாவின் புதினங்களும் "சரித்திரங்கள்' என்றே குறிக்கப்பட்டன. ஆரணிகுப்பு சாமி, தேவன், தமிழ்வாணன் வாயிலாகத் துப்பறியும் புதினங்கள்அறிமுகமாயின. வினோ, மீண்டும் ஜினோ முதலான புதினங்களின் மூலம் சுஜாதாஅறிவியல் புதினங்களை வித்திட்டார். அகிலன், மு.வ. நா. பார்த்த சாரதிமுதலானோர் சமூகப் புதினங்களை வளர்த் தெடுத்தனர். கல்கி, சாண்டில்யன்,மு.மேத்தா, கலைஞர், பூகண்ணன் முதலானோர் வரலாற்றுப் புதினங்களைப்புனைந்தனர். இலஷ்மி, சிவசங்கரி, இராஜம் கிருஷ்ணன் முதலான பெண்எழுத்தாளர்கள் புதின உலகில் தடம் பதித்தோராவர். கள ஆய்வுப் புதினங்கள்( கூட்டுக் குஞ்சுகள்) தருவதில் இராஜம் கிருஷ்ணன் தேர்ச்சி மிக்கவராகவிளங்குகிறார்.

மரபுக் கவிதையின் யாப்புக் கட்டுக்களை உடைத்து உருவானவை புதுக்கவிதைகள்.ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, அப்துல் ரகுமான், சிற்பி, மு.மேத்தா, மின்னூர்சீனி வாசன், பொன். செல்வகணபதி, ஈரோடு தமிழன்பன் முதலானோர் புதுக்கவிதைஉலகில் குறிப்பிடத்தக்கோர். மு.மேத்தாவின் "ஆகாசத்துக்கு அடுத்த வீடு'சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது. புதுக்கவிதையின் எளிய வடிவம் ஹைக்கூ.ஜப்பானிய இறக்குமதி. அமுத பாரதி, அறிவுமதி முதலானோர் ஹைக்கூ கவிஞர்கள்.ஹைக்கூவின் இறுக்கம் குறைந்த வடிவம் சென்ரியூ. ஈரோடு தமிழன்பனின் "ஒருவண்டி சென்ரியூ' தமிழின் முதல் சென்ரியூத் தொகுப்பு நூல் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. ஹைக்கூவைத தமிழ்ப் படுத்திய வடிவம் குக்கூ. மீ.ரா-வின்"குக்கூ' என்னும் நூலே முதல் குக்கூ-வின் தொகுப்பாக உள்ளது.

அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு என மு.வ. எழுதிய கடித இலக்கியங்கள்அரசியல் சார்ந்த கடித இலக்கியங்களுக்கு வழிகோலின எனலாம். தனிநாயகஅடிகளார், மு.வ, வ.சுப. மாணிக்கம் (தமிழ்க்காதல்), க.கைலாச பதி (வீரயுகப்பாடல்) முதலானோர் ஒப் பிலக்கியங்கள் காண வழிவகுத்தனர். அயல்நாட்டு வணிகத்தொடர்பும், அரசியல், அறிவியல் கலப்பு களும் மொழிக்கலப்பை உருவாக்கியதன்மூலம் ஒப் பிலக்கணம் உருவெடுத்தது. நூல்களை மதிப்பீடு செய்யும் திறனாய்வுநூல்களும், மொழிபெயர்ப்பியதும், நாட்டுப்புறவியலும், குழந்தை இலக்கியங்களும், பயண இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்,பெண்ணிய, தலித்திய, ஊடக இலக்கியங்கள் இன்னோ ரன்னவை இருபதாம் நூற்றாண்டுஇலக்கியங்களாக இலங்குகின்றன.

எதிர்வருங்காலத்தில் சட்டத்தமிழ், கணிப்பொறித் தமிழ், அறிவியல் தமிழ்,மருத்துவத் தமிழ், பொறியியல் தமிழ் எனத் தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள்முழு வீச்சில் பன்முகப் பாங்கில் பரவலாக்கப்படல் வேண்டும். மேலும்உலகெங்களிலும் பல்வேறு பகுதிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழ் ஓலைச்சுவடிகள், கையெழுத் துப் பிரதிகள் முதலான தமிழ்க் கருவூலங்கள் தமிழகம்கொணரப்பட்டு அச்சில் ஏற்றப்படல் வேண்டும். தமிழ் நூல்கள் அனைத்தும்காக்கப்படல் வேண்டும்.

Tuesday, 10 July 2012

மேலை நாகரிகங்களில் தடம் பதித்த தமிழ்

உலகில்
இன்றுள்ள பல பொதுத் தன்மைகளுக்கு மூல தாய் நாகரிகம் பல்லிடங்களில்
வேரூன்றிக் கிளைத்ததுவே காரணம். அந்த மூல தாய் நாகரிகம் தமிழர் நாகரிகமே
என்பதற்கு பண்டைய நாகரிக ம்ன்னர் பெயர்களும், ஊர்ப பெயர்களும் தமிழாக
இருப்பது தமிழரின் உலகப் பரவலுக்கு பெருஞ் சான்றாக உள்ளன. இவ்வாறான் ஒரு
தடயம் இடம் பெயர்ந்த தமிழர் தாய் நாகரிகத்தை மறவாது கொடுக்கல் வாங்கலில்
தொடர்ந்து அதனுடன் ஈடுபட்டும் மண உறவு செய்தும் பலகாலம் தம் தொடர்பைப் பேணி
வந்ததாலேயே இன்று நமக்கு அதன் எச்சமாக இப்பெயர்ச் சான்று கிட்டுகின்றது


இந்து மாக் கடலில்.அமைந்திருந்த தென் புலத்திலிருந்து இடம் பெயர்ந்த
மூல நாகரிகத் தமிழர் நடு அமெரிக்காவில் மாயன், தென் அமெரிக்கப் பெருவில்
இன்கா ஆகிய நாகரிகங்களைத் தோற்றுவித்து தொலைகிழக்கு ஆசியாவில் சீனா,
கொரியா, சப்பான் ஆகிய நாகரிகங்களையும் ஆப்பிரிக்காவில் எகிபது, எதியோபிய
நாகரிகங்களையும் அவ்வாறே மேலை ஆசியாவில் சுமேரியா, ஈலம், பொனீசியா ஆகிய
நாகரிகங்களையும் தொற்றுவித்து உள்ளனர்.


இக்கட்டுரை, சிறப்பாக, சுமேரியா, ஈலம், பொனீசியா ஆகிய நாகரிகங்கப்
பகுதிகளிலும் அதன் சுற்று இடங்களிலும் தமிழின் தடங்களுக்கு  எச்சமாக
உள்ள பெயர்களை சிந்து முத்திரைப் பெயர்கள், சங்க இலக்கியப் பெயர்கள், தமிழ்
பிராமி கல்வெட்டுப் பெயர்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு ஆய்கிறது.


இவ் ஆய்வில் மேலை நாகரிக மன்னர், ஊர் மற்றும் தெய்வப் பெயர்களை
ஒப்பிட்டதில் அவை தமிழாய் இருப்பது இந்தாகரிகங்களை மூல தாய் நாகரிகத்
தமிழர் அங்கிருந்த பழங்குடிகளொடு இணைந்து  உண்டாக்கி இருத்தல்
வேண்டும் என்று புலனாகின்றது. ஐயாயிரம் ஆண்டுகளளவில் செமிட்டிக் மக்கள்
கலப்பு பெருமளவில் ஏற்பட்டதால் அவை செமிட்டிக் மயமாகிப் போனாலும்
தொடக்கத்தில் தமிழாகவே இருந்திருத்தல் வேண்டும் ஏனெனில் மூல தாய் நாகரிகத்
தமிழர் தம் முன்னோரைத் தெய்வமாக வழிபட்டு அது காலத்தால் நிலைபெற்று
பின்னாளில் அத்தெய்வங்களுக்கு சிறப்புப் பண்புகள் ஏற்றப்பட்டிருக்க
வேண்டும் எனத்   தோன்றுகிறது.


மூல தாய் நாகரிகத் தமிழர்  இந்நாகரிகங்களை 9,000
ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தும் போது தமிழில் ஆண் பால் அன் ஈறு
வழங்கவில்லை. அது 6,000 ஆண்டுகள் அளவில் அறிமுகமான போதும் பலர் அதை
பின்பற்றாது அன் ஈறு அற்ற பழைய முறையையே பல காலம் பின்பற்றி உள்ளனர்.
அன் ஈறுடன் அல், அம், அர், உகர, இகர, ஐகார ஈறுகளையும் அவர்கள்
கைக்கொண்டனர் எனத் தெரிகிறது. இன்று அன் ஈறு  மட்டும் வழங்குகிறது.
பிற ஈறுகள் கைவிடப்பட்டு விட்டன. சிந்து வெளி முத்திரைகள் இதற்கு சிறந்த
சான்று.  பேரா. இரா.மதிவாணன் சிந்து எழுத்துகளையும்,
முத்திரைகளையும்   மிகத் துலக்கமாகப் படித்துள்ளதால் இவ் ஆய்வில்
அவருடைய Indus script Dravidian (IsD), 1995 என்ற நூல் மேற்கோள் நூலாகக்
கொள்ளப்பட்டிருக்கினறது. சிந்து முத்திரை வாசிப்பின் துணையின்றி எவராலும்
இப் பெயராய்வை மேற் கொள்ள இயலாது. இப்பெயர் ஆய்வு ஒலி ஒப்புமையை மட்டுமே
கருத்தில் கொண்ட ஒரு தொடக்கக் கட்ட ஆய்வு,

 

அசீரிய சுமேரிய நாகரிக தெய்வங்கள்


அசீரியாவின் முதல்  பூசக இளவரசர் (Priest prince) முதற்கொண்டு பலர் Ishakku  என பட்டம் கொண்டு இருந்தனர். இந்த இசக்கு என்பது தமிழில் இசக்கி என இன்றும் நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது.


பாபிலோனிய அசீரிய தெய்வங்களின் பெயர்கள் சில தமிழாய் உள்ளன.


எழுத்துத் தெய்வம்  Nabu
எனப்பட்டது தமிழில் இதை நப்பு > நப்பன் என செப்பமாகப் படிக்கலாம்.
நப்பன் என்ற பெயர் தமிழக சிந்து பானை ஓடுகளிலும், சிந்து முத்திரைகளிலும்
பதிவெய்தி உள்ளது  M 1656.


புயல் தெய்வம் Adad எனப்பட்டது.தமிழில் ஆத் ஆத் > ஆதன்ஆதன் என  அன் ஈறு சேர்த்து  படிக்கலாம். அழகர் மலை தமிழி கல்வெட்டில் 12:1 மதிரை  பொன் கொல்வன் ஆதன் ஆதன் என பொறிக்கப்பட்டு உள்ளது.


வான் தெய்வம் Anu
எனப்பட்டது. தமிழில் அன்னு > அன்னி > அன்னன் என செப்பமாகப்
படிக்கலாம். சிந்து முத்திரைகளில் பதிவு எய்தியுள்ள பெயர்.  M1160.


வெள்ளநீர்த் தெய்வம் Ea எனப்பட்டது. அன் ஈறு சேர்த்து இயன் > இயனன் என செப்பமாக படிக்கலாம். சிந்து முத்திரையில் பதிவெய்தி உள்ளது. H3457.


பாபிலோன் தலைமைத் தெய்வம் Marduk எனப்பட்டது Bel > வேள் எனவும் சொல்லப்பட்டது. தமிழில் மருது உக் > மருது உக்கு > மருது உக்கன் என செப்பமாக படிக்கலாம்.


காட்டுத் தீயைக் க்ட்டுப்படுத்தும் தெய்வம் Nergal எனப்பட்டது.
தமிழில் நெருகல் என செப்பமாகப் படிக்கலாம். எரிகல் என்னும் களப்பிர மன்னன்
இருந்தான். நெருகல் எரிகல் இரண்டு ஒரே பொருள் உடைத்து.


ஞாயிற்று தெய்வம் utu எனப்பட்டது.. தமிழில் உத்து > உத்தன் என செப்பமாகப் படிக்கலாம். சிந்து முத்திரையில் இப்பெயர் பதிவெய்தி உள்ளது.M1243.


நிலவுத் தெய்வம் Nanna 
எனப்பட்டது. தமிழில் நன்ன > நன்னன் > நன்னவன் என அன் ஈறு இட்டுப்
படிக்கலாம். சங்க இலக்கியத்திலும், சிந்து முத்திரையிலும் பதிவெய்தி
உள்ளது. M 1070.


நீர்த் தெய்வம் Nammu
எனப்பட்டது. தமிழில் நம்மு >  நம்மன் என செப்பமாகப் படிக்கலாம்.
தமிழக் சிந்து எழுத்துப் பான் ஓடுகளிலும், அரப்பா பானை ஓட்டிலும்
இப்பெயர்  காணப்படுகிறது.


செழுமைத் தெய்வம் Dagan
எனப்பட்டது தமிழில் தக்கன் என்பது செப்பமான வடிவு. தமிழின் ஆண்பால் ஒருமை
ஈறு அன் தெளிவா  இங்கு இடம் பெற்றுள்ளது. கோவை சூலூர் மட்கலனில்
தக்க இன்னன் என எழுதப்பட்டுள்ளது.  சப்பான் நாகரிகத்திலும் தக்க என்ற
பெயர் உண்டு.


அசீரியாவின் ஞாயிற்றுத் தெய்வம் Assur
எனப்பட்டது தமிழில் அசூர் என்பது செப்ப வடிவு. தமிழ்நாட்டில் திருச்சி
செங்கலூர் போகும் வழியில் அசூர் எனும் ஊர் உள்ளது. பண்டு இது ஆள் பெயராக
வழங்கி உள்ளது.



அசீரிய மன்னர்கள் >  Assyrian kings

Shamshi Adad I 1813 - 1791 B.C.
தமிழில் சாம் சேய் ஆத் ஆத் > சாமன் சேய் ஆதன் ஆதன் என செப்பமாகப்
படிக்கலாம்.  சாமன் - சிந்து முத்திரைப் பெயர் M 2574.. சேய்  -
மேட்டுப்பட்டி தமிழி கல்வெட்டு 9:8 குவிர அந்தை சேய் ஆதன் எனப் பொறிக்கப்பட்டு உள்ளது. ஆத்ஆத் அசீரியத் தெய்வம். அழகர் மலை தமிழி கலவெட்டில் 12:4 கணக ஆதன்  மகன் ஆதன் ஆதன் என உள்ளது.


இம்மன்னது போர் அரசிய உறவு ஆகியவற்றுடன்  தொடர்புடைய வேளிர்கள் கீழ்வருமாறு:

Igur Kap Kapu
> தமிழில் இக்கர் காப் காப்பு > காப்பன் காப்பு என செப்பமாகப்
படிக்கலாம். சிந்து முத்திரைப் பெயர் K7064B, IsD பக்.96.மேலை ஆசியாவில்
மன்னன் கல்லறையில் கிட்டிய சிந்து முத்திரை ஒன்றில் காப் காப்பு என உள்ளது .


Bel Kap Kapu > தமிழில் வேள்
காப் காப்பு > வேள் காப்பன் காப்பு என செப்பமாகப் படிக்கலாம். வேள் ஒரு
தெய்வப் பெயர். இதற்கு பெருமான் (Lord) எனப் பொருள். வகரம் பகரமாய்த்
திரிந்து உள்ளது.


Bel Bani  > தமிழில் வேள்
வண்ணி > வேள் வண்ணன் என செப்பமாகப் படிக்கலாம் வ > ப  கடு ஒலித்
திரிபு. சிந்து முத்திரைகளில் காணப்படும் பெயர் வண்ணன்.M314a . கொடுமணல்
பானை ஓடுகளிலும் காணப்படுகிறது. இப்பெயர் இகர ஈறு பெற்றுள்ளது.



Puzur asshur 1420 B.C.
>  தமிழில் பழர் அசூர் > பழன் அசூர் > பழயன் ஆசூர் என
செப்பமாகப் படிக்கலாம்.  அர் ஈறு பெற்றுள்ளது. பழயனூர் ஒரு தமிழ்
நாட்டு ஊர். பழையன் கோச் செங்கணானின் படைத் தலைவன். அசூர் ஒரு அசீரியத்
தெய்வம்.



Asshur na Dinakhe > தமிழில் அசூர் ந திண் அக்கி> ந திண்ணன் அக்கன் என செப்பமாகப் படிக்கலாம்.

- சிந்து முத்திரைகளில் பெயர்களின் நடுவே ஒற்றை எழுத்தாக வருகின்றது.
இதற்கு சிறப்புப் பொருள் இருக்க வேண்டும். சிந்து வெளி தவிர சப்பான்
நாகரிகத்திலும் மன்னர் தம் ப்ட்டப் பெயரிகளில் ந ஒகரத் திரிபு பெற்று No Mikado
> ந மய் காட என உள்ளது. திண்ணன் -  சிந்து முத்திரைகளில் அன் ஈறு
பெற்றும் பெறாமலும் இப்பெயர் உள்ளது.H3645,  IsD பக். 99. கண்ணப்ப
நாயனாரின் இயற்பெயர் திண்ணன். அக்கன் - மருங்கூரில் கிட்டிய சிந்து பிராமி
எழுத்து கலந்த பானை ஓட்டில் அதிஅகன்(அத்தி+அக்கன்) என எழுதப்பட்டுள்ளது. சிந்து முத்திரை M3372, IsD பக்.97 அ க்கன் அல், அர், இ, உ ஈறுகளைப் பெறுவதும் உண்டு.


Asshur Uballit 1370 B.C. > தமிழில் அசூர் உப்பல் இத் > உப்பன் இத்தன் என செப்பமாகப் படிக்கலாம்.
உப்பன்-
கொடுமணல் சிந்து எழுத்து பானை ஓடுகளில் வரும் பெயர். இங்கு அல் ஈறு பெற்று
உள்ளது. இத்தன் - சிந்து முத்திரைப் பெயர்  M2148, IsD பக.122.


இம்மன்னனது போர் அரசிய உறவு ஆகியவற்றில் தொடர்புடைய்  வேளிர் பின்வருமாறு.


Bel Nirari 1370 B.C.
> தமிழில் வேள் நய்யர் அரி > நய்யன் அரியன் என செப்பமாகப்
படிக்கலாம். நய்யன் - தமிழக சிந்து எழுத்துப்  பானை ஓட்டிலும், சிந்து
முத்திரையிலும் காணப்படுகின்றது. H3767, IsD பக்.155. அரியன் -
அரியக்குடி, அரிட்டாப்பட்டி, அரியான்குப்பம் ஆகியன தமிழ்நாடு, புதுவையில்
உள்ள ஊர்கள். தான்சானிய மேனாள் அதிபர் Julius Kambarge Nyerere.



Pudi ILu 1360 B.C. >
தமிழல் பூதி இல்லு > பூதன் இல்லன்  என செப்பமாகப் படிக்கலாம்.
பூதன் - சங்க இலக்கியங்களில் பதிவு எய்திய பெயர். இங்கு இகர ஈறு
வந்துள்ளது. 63 நாயன்மாருள் ஒருவர் அப்பூதி அடிகள் (அப்பன்.>
அப்பு + பூதன் > பூதி). எடக்கல் தமிழி கல்வெட்டு 26:3 கோபூதி விர. என பொறிக்கப்பட்டு உள்ளது.  இல்லன் - ஒரு பழந் தமிழ்ப்  பெயர். கீழவளவு தமிழி கலவெட்டு 4:1 உபசன் தொண்டி (இல்)லவோன்  கொடு பளிஈ என தமிழ்நாடு தொல்லியல் துறையின் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் என்ற நூலுள் உள்ளது. சீன நாகரிகத்தில் Song ஆள்குடி மன்னன் Liu Yilong 424 - 453 A.D. >  தமிழில் ஒளிய இல்லன் என படிக்கலாம். சீனத்தில் னகர மெய் 'ன்' > ஙகர ' ங்'   மெய் ஆகத் திரிந்து உள்ளது.



Shalmaneser I 1345 B.C.
> தமிழில் சால் மான் இசர் > சாலன் மானன் இசன் என செப்பமாகப்
படிக்கலாம். சாலன் - சாலம்மாள், சாலன், சாலி ஆகிய பெயர்கள் தமிழகத்தில்
வழங்குகின்றன. செங்கலபட்டு அருகே உள்ள ஊர் சாலவாக்கம். மானன் -
சிந்து முத்திரைப் பெயர். M 1225, IsD- பக்.149 . 63 நாயன்மாருள் ஒருவர்
மானன் கஞ்சாறர். இசன் - யகர சகர திரிபு. இயன்>இயனன் சிந்து முத்திரைப்
பெயர் H3547, IsD- பக்.120.


இவ் வேந்தன் வட சிரியாவில் Amanus மலைக்கு அருகே அமைந்த Musri என்ற ஊரினை வென்று அடிபணியக் கொண்டான். முசிறி என்ற பெயரில் திருச்சி அருகிலும் பிற இடங்களிலும் ஊர்கள் உள்ளன.



Tukulti Ninib 1290 B.C.
> தமிழில் துக்கல் இத்தி நின் இவ் > துக்கன் இத்தன் நின்னன்
இவ்வன் என செப்பமாகப் படிக்கலாம். துக்கன் - துக்காராம் என மராட்டியத்தில்
வழங்குகிறது. இத்தன் -   சிந்து முத்திரைப் பெயர் M2148.
நின்னன்- இன்கா நாகரிக மன்னன் பெயர் Ninan Cuyochi 1525 AD > நின்னன் குய்அக்கி.


இவ் வேந்தனுடன் போர் அரசிய உறவுகளால் தொடர்புடைய மன்னர்கள் பின் வருமாறு.


Nabu Daian 1250 B.C.
> தமிழில் நப்பு தாயன் > நப்பன் தாயன் என செப்பமாகப் படிக்கலாம்.
நப்பு ஒரு தெய்வப் பெயர். இகர ஈறு பெற்று நப்பு< நப்பன் ஆனது. தாயன் -
விண்ணன் தாயன் சங்க இலக்கியத்துள் பதிவு எய்திய பெயர். இம்மன்னன் பெயர் அன்
ஈறு பெற்றுள்ளது ஒரு சிறப்பு. சீன,  கொரிய நாகரிகங்களிலும் இப்பெயர்
உண்டு.


Asshur Dan 1210 B.C. >
தமிழில் அசூர் தன் > தன்னன் என செப்பமாகப் படிக்கலாம். தன்னவன் எனவும்
வழங்கும். அன் ஈறு பெற்றும் பெறாமலும் தன்னன் சிந்து முத்திரையில்
பதிவாகி உள்ளது  K59a.
  

 வேந்தன் Asshur Nazir Pal 885 - 786 BC போர், அரசிய உறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள்.

இவ்
வேந்தன் போரில் நிஷ்து  தலைவனின் மகனைக்  கொன்று  அவன்
தோலை கோட்டை மதிலில் விரித்துத் தொங்க  விட்டான். அவன் பெயர் Bu Bu
> தமிழில் பு பு என படிக்கலாம்.   இப்பெயர் சிறப்பாக சிந்து
முத்திரைகளில் மட்டுமே காணப்படுகிறது. M 2301, IsD பக் 109.


இவன் அசீரியக்குடியான Khamitai என்பானுடைய ஆளுகையின் கீழ் அவ் அரசை வைத்தான். தமிழில் காம் இத்தை > காமன்  இத்தன்
என செப்பமாகப் படிக்கலாம். காமன் - கலிக் காமன்  நாயனார். சிந்து
முத்திரையிலும் பதிவெய்திய தமிழ்ப் பெயர்  இது. H3669, IsD பக்.181.
இத்தன்- தமிழுக்கே உரிய ஐகார  ஈறு

இருப்பது இதன் சிறப்பை துலக்குகிறது. சிந்து முத்திரை M2148 Isd பக்.122.

வேந்தன் Shamshi Adad I 1080 B.C. வரலாற்றில் தொடர்புடைய மன்னர்கள் பின்வருமாறு.

இவன் காலத்தில்  இருந்த அரேபிய இளவரசன் Shulman khaman ILani
> தமிழில் சல்மான் காமன் இள அன்னி என படிக்கலாம்.  காமன் அன் ஈறு
பெற்றுள்ளது. இள - இளமைப் பொருள்  கருத்து. இளங் குமணன் சங்க
இலக்கியப் பெயர். அன்னி சங்க  இலக்கியப் பெயர்.


இவன் காலத்தில்   Shuhites ஆட்சியாளனாக இருந்தவன் ILubani
> தமிழில் இள வண்ணி > இள வண்ணன் என செப்பமாய்ப் படிக்கலாம். வண்ணன்
-  கொடுமணல் சிந்து எழுத்து பானை ஓட்டில் உள்ள பெயர். சிந்து
முத்திரையிலும் பதிவு பெற்றுள்ள பெயர் M314a.


இவ்வேந்தனை Khalzi Lukha என்பான் எதிர்த்தான் அதற்கு தலைமை ஏற்றவன் Khula >
தமிழில் கூல > கூலன் என செப்பமாகப் படிக்கலாம். சிந்து முத்திரையில்
பதிவெய்தி உள்ளது M 142 , IsD பக்.84. கூலப்ப நாயக்கன் தமிழ்
இலக்கியப்  பெயர்.


    
அசீரிய வேந்தன் Shalmaneser II 859 - 825 B.C. படையெடுப்பின் போது நாம்ரி என்ற நாட்டிற்கு இளவரசனாக அவனால் அமர்த்தப்பட்டவன் Yanzu >
தமிழில் யாண் > யாணன் என செப்பமாகப் படிக்கலாம். இது ஒரு பழந்தமிழ்
பெயர் இங்கு அன் ஈறு பெறாமல் வந்துள்ளது. சிந்து முத்திரையில்
L6052,IsDபக்118, M278A. யகர சகர திரிபில் யாணன்>சாணன் ஆகும். 


வேந்தன் Nirari  III 811- 783B.C. > கி.மு.797இல் தமாஸ்கசை முற்றுகையிட்ட போது அதன் அரசனாக இருந்தவன் Mari
> தமிழில் மாரி என்பது செப்பமான வடிவம். மாரி - மழை எனப் பொருள்.
மாரிமுத்து, மாரியப்பன் இன்றும்  தமிழகத்தில் வழங்கும் பெயர்.
மாரி என்று ஒரு ஊரும்  மேலை நாகரிகத்தில் இருந்துள்ளது.


வேந்தன் Tiglath pileser III 745-727 B.C. இன் போர் அரசிய உறவு ஆகியவற்றுடன் தொடர்புடைய மன்னர்கள்.


உங்கி என்ற ஊரின் மன்னனாய் இருந்தவன் Tuta Ammu
தமிழில் துட அம்மு > துடன் அம்மன் என செப்பமாகப்  படிக்கலாம்.
துடன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். வடகிழக்கு ஈழத்தின் ஓர் ஊர்ப் பெயர் துடன்குளம். எகிபதின் 18  ஆம் ஆள்குடியின் மன்னனை பெயர் Thutmoses 1493 - 1481 B.C.> தமிழில்  துட் மோசி > துடன் மோசி. மோசி - மோசி கீரனார், முடி மோசியார் சங்க காலப் புலவர்கள். அதே ஆள்குடியில் இன்னொரு மன்னன் Tutan Khaman 1334-1325 BC  > தமிழில் துடன் காமன் என்பது செப்ப வடிவு.. அம்மன் - பழந்தமிழ்

ஆடவர்ப் பெயர். மேலை ஆசியாவில் கிட்டிய சிந்து முத்திரையில் இப் பெயர் உள்ளது. சேலத்தில் அம்மன்
பாளையம் > அம்மம்பாளையம் என்ற ஊரில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இம்மன்னன் பெயர் உகர   ஈறு பெற்று உள்ளது.


சாமல் என்ற ஊர் (சாமன் > அல் ஈறு பெற்று உள்ளது) மன்னன் Pan Ammu
> தமிழில் பண் அம்மு > பண்ணன்  அம்மன் என செப்பமாகப்
படிக்கலாம். பண்ணன் - சங்க இலக்கியப் பெயர். சிந்து முத்திரையிலும் பதிவாகி
உள்ளது  8326 IsD பக்.82, H3012 IsD பக்.102.

  
Istitunda வின் மன்னன் Tukha ammi
> தமிழில் துக்க அம்மி >  துக்கன் அம்மன் என செப்பமாகப்
படிக்கலாம். துக்கன் - தமிழ் மரபினரான மராட்டியர் துக்காராம் எனப்
பெயர் கொண்டுள்ளனர். அம்மன் - இங்கு இகர ஈறு பெற்றது.


Khubishna என்ற ஊரின் மன்னன் Urimmi
> தமிழில் ஊர் இம்மி > இம்மன் என செப்பமாகப் படிக்கலாம். ஊர் -
ஊர்  என்ற சுமேரிய ஊரன் எனப் பொருள். இம்மன் - இமயன் எனவும் வழங்கும்.
அரிட்டாபட்டி  தமிழி கல்வெட்டு 2:2  இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன் இவ்முழ கொடுபிதவன். இகர எகர திரிபு இமய >  எமய. ம்ன்னன் பெயர் இகர ஈறு பெற்று உள்ளது.


Gaza மன்னன்  Khanunu or Hanno
>   தமிழில் கண்ணு என்பது செப்பமான வடிவம். அன் ஈறு பெற்று
கண்ணன் எனவும் ஐகார ஈறு பெற்று கண்ணை எனவும் வரும். கண்ணுசாமி,
சின்னக்கண்ணு,செல்லக்கண்ணு ஆகிய பெயர்கள் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது.
மதுராந்தகம் சானூர் சிந்து எழுத்துப் பானைஓட்டில் கண்ணு என
உள்ளது.  

              
                   
இவன் காலத்தில் சால்திய Yakin பழங்குடித் தலைவன் பெயர் Merodach Baladan
> தமிழில் மேற் ஓதச் வல்லாதன் > மேற் ஓதச்சன்  வல்லாதன் என
செப்பமாகப் படிக்கலாம். மேற் - மேல், மேன், மேற், மேழ் என்பன எல்லாம்
உயர்வுக் கருத்தைக் குறிக்கும். மேனன் என்பது  மேலானவன் எனப்
பொருள்படும். எகிபது நாகரிகத்தில் மேன், மேற்  ஆகிய பெயருடைய மன்னர்
உண்டு. ஓதச்சன் - சிந்து முத்திரைப்  பெயர்  M4A. ஓதன்+
அச்சன்=ஓதப்பன். அல் ஈறு பெற்று ஓதல் ஆந்தையார் என ஒரு சங்க இலக்கியப்
புலவர் உள்ளார்.

மேற்ஓதச் என்பது ஒரு தெய்வத்தின் பெயர். வல்லாதன் - அன் ஈறு  தெளிவாகப் பெற்ற சேர மரபுப் பெயர்.
 
                 
Carchemish என்ற ஊரின் அரசனாக இருந்தவன் Pisiris > தமிழில் பிசிர் என்பது செப்பமான் வடிவம். பிசிர் ஆந்தையார் ஒரு சங்க காலப்  புலவர்.
 
 
அசீரிய வேந்தன் Sennacherib 704-682 B.C.
> தமிழில் சேன் ந சேர் இவ் > சேனன் ந சேரன் இவ்வன் என செப்பமாகப்
படிக்கலாம். சேனன் - சிந்து முத்திரைப் பெயர் M1088, IsD பக்.143. ந -
சிந்து முத்திரையில்

ஒற்றை எழுத்தாக வருவது. சேரன் -  எதியோபிய நாகரிகத்தில் சேர்ஆத ஒரு
மன்னர் பெயர். இவ்வன் - சிந்து முத்திரைப் பெயர்  M2423, IsD பக்.143.
 
இவ் வேந்தனை எதிர்த்து போரிட்ட அரசுகளுடன் ஒன்று சேர்ந்த சிற்றரசியத்தின் பெயர் Gambuli > காம்புலி. இது திருக்காம்புலி ஊரை ஒத்துள்ள பெயர்.
 
                 
அசீரிய வேந்தன் Esar Haddon
> தமிழில் இசர் அட்டன் என்பது செப்ப வடிவம். இசர் - யகர சகர திரிபில்
இயன் இசன் ஆகி அர் ஈறு பெற்று உள்ளது. சிந்து முத்திரைக் பெயர் H3547 IsD
பக்120அட்டன் - சிந்து முத்திரைப் பெயர் M706,IsD பக்.96. இதற்கு சிவந்த
நிறத்தோன் என்பது தமிழில் பொருள். திருச்சி - கொட்டாம்பட்டி - மதுரை
சாலையில் ஓர் ஊர் பெயர் அட்டத்தூர்.
 
 
Asshur Banipal
> தமிழில் அசூர் வானி வால் என்பது செப்பமான வடிவு வகர>பகர திரிபு.
அசூர் - ஆசீரிய ஞாயிறு தெய்வம். வானி - ஒளிர் வெண்மை என்பது தமிழ்ப்
பொருள். வானன் > பானன்  அன் ஈறு பெற்ற

தமிழ்ப் பெயர், வால் > பால் - வெண்மை.
 
 
Asshur Etil ILi Ukinni
> தமிழில் எட்டில் இளி உக் இன்னி > எட்டில் இளி உக்கன் இன்னன் என
செப்பமாகப் படிக்கலாம். எட்டில் - ஊர் அல்லது  குடும்பப் பெயராக
இருக்கலாம். கேரளத்தில் இவ்வழக்கம் உண்டு.

இளி - சிந்து முத்திரைப் பெயர் M3296, IsD பக். 119. உக்கன் - உக்கு
என  அரப்பா பானைஓட்டிலும், உக்கன் என கொடுமணல் பானை ஓட்டிலும்
உள்ளது. இன்னன் - இகர ஈறு பெற்றுள்ளது.
 
 
சுமேரிய அரசர்கள் > Sumerian kings     
 
           
Eannatum of Lagash
> தமிழல் இயன் நத்தம் > இயனன் நத்தன் என செப்பமாகப் படிக்கலாம்.
இயன் - சிந்து முத்திரைப் பெயர் H3547, IsD  பக்.120. நத்தன் - சிந்து
முத்திரைப் பெயர் M 653, IsD பக்.110.
 
 
Mes kalak Dug of Ur
> தமிழில் மேழ் காளம் தக் > மேழன் காளன் தக்கன் என செப்பமாகப்
படிக்கலாம். மேழன் உயர்ந்தோன் எனப் பொருள். மேழம் மலை ஆடு. காளன் - சிந்து
முத்திரைப் பெயர் M3254. இன்றும்

தமிழகத்தில் வழங்குகிறது, முத்துக்காளத்தி > காளன்+அத்தி. தக்கன் - சூலூர் மட்கலனில் தக்க இன்னன் என எழுதப்பட்டுள்ளது.
 
 
Adab king Lugal Anne Mundu 2550 B.C.
> தமிழில் இளகல் அன்னி மந்து  என செப்பமாகப் படிக்கலாம். இளகல் -
ஓர் ஊர் பெயராக இருக்கலாம். அன்னி - சிந்து முத்திரைப் பெயர் M 1349, IsD
பக்.241.மந்து -
பழந்தமிழ்ப்         
பெயர். அரசனைப் பண்டு குறித்தது.
 
 
Gilgamesh 2500 BC
> தமிழில் கிள் கா மேழ் > கிள்ளன் காமன் மேழன்  என செப்பமாகப்
படிக்கலாம். கிள்ளன் - இகர ஈறு பெற்று கிள்ளி, உகர ஈறு பெற்று கிள்ளு
எனவும் வரும். திருச்சி - கீரனூர் சாலையில் கிள்ளுக் கோட்டை எனும் ஊர்
உள்ளது. கா - சிந்து முத்திரையில்  ஒற்றை எழுத்தாக வரும்
பெயர்.M2214, IsD பக்.226. பல்லங்கி மாயன்  நாகரிக மன்னன் பெயர் Ch'a I 252 B.C. > தமிழில் கா . எகிபதின் முதல் ஆள்குடியில் ஒரு மன்னன் பெயர் Qa'a 3100 - 2890 B.C. > தமிழில் கா.  மேழன் - மேல், மேன், மேற் என எகிபதில் பதிவெய்தி உள்ளது.
 
 
EnaKalle of Umma
> தமிழில் என்ன கள்ளி >  என்னன் கள்ளன் என செப்பமாகப்
படிக்கலாம். என்னன் - சிந்து முத்திரைப் பெயர்  H4162, Isd பக்.123.
க்ள்ளன் - இப்பெயர் இகர ஈறு பெற்று உள்ளது.

             
En Anna Tumi I
>  தமிழில் என் அன்ன தூமி >  என்னன் அன்னன் தூமன் என
செப்பமாகப் படிக்கலாம்.   என்னன் -  அன் ஈறு பெறாமல்
உள்ளது.அன்ன்ன் - சிந்து முத்திரைப் பெயர் M3246. தூமன் - ஒரு பழந்தமிழ்ப்

பெயர். இங்கு இகர ஈறு பெற்று உள்ளது. ஐகாரம் பெற்று தூமை ஆகும்.
ஐரோப்பாவிலும் Alexander Dumas என இக்கால்
வழங்குகிறது.       
                  
    
Entemena
> தமிழில் எண்டி மீன > எண்டி மீனன் என செப்பமாகப் படிக்கலாம். எண்டி
- ஞாயிற்றை வெய்யிலோன் என்பர். தெலுங்கில் வெய்யில் எண்ட எனப்படும். எனவே
எண்டல், எண்டன் ஆகிய

பெயர்கள் இருந்துள்ளன். எண்டத்தூர் மதுராந்தகம் - திண்டிவனம் சாலையில்
அமைந்த ஊர்.  மீனன் - பாண்டின் மீனன் எனப்பட்டான். இன்றும் மீனன்
என்ற பெயர் உள்ளவர் உண்டு.
 

Ur நகரின் கடைசி மன்னன் Ur Ukagina
> தமிழில் ஊர் உக் கீண > உக்கன் கீணன் என செப்பமாகப் படிக்கலாம்.
உக்கன் -  கொடுமணல், அரப்பா பானைஓடுகளில் கீறப்பட்டுள்ள பெயர். கீணன்
-பழந்தமிழ்ப்

பெயர்.. கீணனூர் நெய்வேலிக்கு அருகே உள்ள ஊர்ப் பெயர்.
 
 
 Lagash மன்னன்  Gudea
> தமிழில் குடிய > குடியன் என படிக்கலாம். பண்டு ஆள் பெயராக வழங்கி
இக்கால் சாதிப் பெயராக வழங்குகிறது. குடிய என்ற பெயரில் மேலை ஆசியாவில்
ஊரும் இருந்து உள்ளது.
 
 
Ur nammu 2112-2095 B.C.
> ஊர் நம்மு > நம்மன் என செப்பமாகப் படிக்கலாம். தமிழக
பானைஓடுகளிலும், சிந்து முத்திரையிலும்  காணப்படும் பெயர். 8205, IsD
பக்.135.
 
 
Puannum Buannum
> தமிழில் பூயன்னம் உய்யன்னம் > பூயன் அன்னம் உய்யன் அன்னம் என
செப்பமாகப் படிக்கலாம்.பூயன்- மேலை ஆசிய சிந்து முத்திரையில் பூயன் என
உள்ளது. அன்னம் - அம் ஈறு வந்து

உள்ளது. சிந்து முத்திரையில் அன்னன் பதிவாகி உள்ளது. H3246,IsD பக்.97. உய்யன் - சிந்து முத்திரைப் பெயர் M2636,IsD பக்.110.
 
 
Ur Nungal 2580 BC
> நங்கல் > நங்கன் என செப்பமாகப் படிக்கலாம். திருக்காம்புலியூர்
பானைஓட்டில் நங்கன் என உள்ளது. பக்ரா-நங்கல்  ஓர் பேரணை.
 
 
Ur Utu 2150 B.C. > தமிழில் உத்து > உத்தன் என படிக்கலாம். சிந்து முத்திரைப் பெயர். M1243, IsD பக்.110.
 
 
குடியன் அரசின் மன்னன் Erridu Pizir > தமிழில் எருது பிசிர் என்பது
செப்பமான வடிவம். எருது - எருதன் இராசராசன் திருவையாறு கல்வெட்டில் இப்
பெயர் பொறிக்கபபட்டு உள்ளது. எதியோபிய
மன்னன்.             Erda Amen Awseya 681-675 BC > எருதன் ஆமன் அவ்அன் சேயன். துருக்கி அதிபர் Erdogan > எருத அகன்.  பிசிர் - பிசிர் ஆந்தையார்.

பாபிலோன் மன்னர்கள்  > Babylon kings
 
 
Ammi saduqa 1582-1562 B.C.
> தமிழில் அம்மி சா தக்க > அம்மன் சா தக்கன். அம்மன் - மேலை ஆசிய
முத்திரையில் பதிவாகி உள்ளது. இப்பெயர் இகர ஈறு பெற்று உள்ளது.
அம்மன்பாளையம் சேலத்து

ஊர். சா - சிந்து முத்திரைகளில் ஓரெழுத்து பெயராக பதிவாகி உள்ளது.
தக்கன் - தமிழக மட்கல சிந்து எழுத்துப் பெயர்.சப்பானில் இப்பெயராட்சி
உண்டு.
 
 
Naplanum 1961-1940 B.C.
> தமிழில் நப்பல் அன்னம் > நப்பன் அன்னன்  என செப்பமாகப்
படிக்கலாம். நப்பன் - சிந்து முத்திரைப் பெயர் M1656 அன்னன் - சிந்து
முத்திரைப் பெயர் அம் ஈறு பெற்று உள்ளது.
M1160.          அன்னி என
இகர ஈறு பெற்றும் வரும்.
 
 
Samium 1912-1877 B.C. >  தமிழில் சான் இயம் > சாமன் இயன் என செப்பமாகப் படிக்கலாம். சாமன் - சிந்து முத்திரைப்பெயர்.
M2574,IsD பக்.91. யகர சகர திரிபில் யாமன் > சாமன் ஆகியது. இயன் -
அம் ஈறு  பெற்று உள்ளது. சிந்து முத்திரைப் பெயர். H3547,IsD,
பக்.120.
 
 
Gun Gunum 1868-1841B.C.
> தமிழில் கண் கண்ணம் > கண்ணன்  கண்ணன் என செப்பமாகப்
படிக்கலாம். முதல் கண்ணன் அன் ஈறு பெறவில்லை. இரண்டாம் கண்ணன் அம் ஈறு
பெற்றுள்ளது. கண்ணன் சங்க இலக்கியப் பெயர். சிந்து முத்திரைப் பெயர்
H3349,IsD,பக்.172.
 
 
 
Sumuel 1830-1801 B.C.
> தமிழில் சாமு எல் > சாமன் எல்லன் என  செப்பமாகப் படிக்கலாம்.
எல்லன் - தமிழகத்தில் இன்றும் வழங்கும்  பெயர்; எல்லப்பன்,
எல்லைய்யா. இகர ஈறு பெற்று எல்லி ஆவது  உண்டு.
 
 
Ammi Ditana 1683-1640 B.C.
> தமிழில் அம்மி திட் அண்ண > அம்மன் திட்டன் அண்ணன் என செப்பமாகப்
படிக்கலாம். திட்டன் - திட்டன்குடி > திட்டக்குடி. இகர ஈறு பெற்று
திட்டி எனவும ஆகும். அண்ணன் -  சிந்து முத்திரைப் பெயர் M433, IsD
பக்.82. அப்பன் போல்  மதிப்புரவுப்  பெயர்.
 
 
 Melam Kur Kukka
> தமிழில் மேலம் கார் கக்க > மேலன் கார் கக்கன் என செப்பமாகப்
படிக்கலாம். மேலன் - மேனன் எனவும் வழங்கும் இதன்  பொருள் மேலான
என்பது. அம் ஈறு பெற்று உள்ளது. கக்கன் - சிந்து

முத்திரைப் பெயர் H764B. கக்கன் மேனாள் தமிழக அமைச்சர்.  கார் - கருமைப் பொருள்.
 
 
Burnaburiash I
> தமிழில் பரண பூரி > பரணன் பூரி என செப்பமாகப் படிக்கலாம். பரணன்
-  சங்க இலக்கியப் புலவர். பூரி - பூரிக்கோ குறுந்தொகை தொகுத்தவர்.
பூரிக்கோ கி.பி.220 -250  ஒரு சேர அரசன்.கொரிய நாகரிகத்தில் தங்கன்
வழி வந்த மன்னன் Buru 2240-2182 B.C. >  தமிழில் பூரு. இங்கு உகர ஈறு பெற்று உள்ளது.
 

Kassite மரபு பாபிலோன் ம்னனர்கள். இவர்கள் செமிட்டிக் இனமோ  இந்தோ ஆரிய இனமோ அல்லர். இவர்கள் மொழியும் தனிப்பட்டது.

                
இம்மரபு அரசன் Karigalzu I 1374-1360 B.C. &  Karigalzu II 1332 - 1308 B.C. >
தமிழில் கரிகால் > கரிகாலன் என செப்பமாகப் படிக்கலாம்.  கரிகாலன்
என்ற பெயர் தமிழகத்தில் 2,500 ஆண்டுகள் பழமையதே  ஆனால் பாபிலோனில்
3,400 ஆண்டுகள் பழமையது. தப்பும் போது  தீயில் கால் கருகியதால்
கரிகாலன் எனப்பட்டான்
என்ற விளக்கம் தவறு.
                 
                  

 
Nazi Maruttash 1307-1282 B.C. > தமிழில் நசி மருத  > நச்சி மருதன் என செப்பமாகப் படிக்கலாம். நச்சி - இகர ஈறு பெற்ற நச்சன் என்ற சிந்து முத்திரைப் பெயர். M672, IsD.பக்.116. மருதன் - மருதன் இள நாகன்  ஒரு சங்க காலப் புலவர்.


Melishipak I > தமிழில்
மேலி சிப் அக் > மேலன் சிப்பன் அக்கன் என செப்பமாகப் படிக்கலாம். மேலன்
- இகர ஈறு பெற்று மேலி ஆனது.  சிப்பன் - ஆன் ஈறு பெறாமல் வந்துள்ளது.
சீன நாகரிகத்தில் மேலை Qin   ஆள்குடி மன்னன்  Chipan 412-428 AD >
தமிழில் சிப்பன் என்பது செப்பமான வடிவம். நெய்தல் நில மக்கள்
இப்பெயர் உடையவர் ஆதல் வேண்டும். அக்கன் - அல், இ, உ அம் ஈறு பெறும்
ஒரு தமிழ்ப் பெயர். சிந்து முத்திரை M3372, IsD,பக்.72.


                   
சிப்பை என்பான் மகன்  Kasshu Nadin Akhe 1056-1054 B.C.  >  தமிழில்
காச்சு நத்தன் அக்கி > காச்சன் நத்தன் அக்கன் என செப்பமாகப்
படிக்கலாம். காச்சன் - சிந்து முத்திரைப் பெயர் H3826 & 3363
IsD,பக்.100. நத்தன் - சிந்து முத்திரை H3122, IsD பக்-106. அக்கன் - இகர
ஈறு பெற்று உள்ளது.


                  
ஈலம் மன்னர்கள் > Kings of Elam  


                  
       
இவர்கள் தென்மேற்கு ஈரானை ஆண்ட செமிடிக் இனமோ அல்லது  இந்தோ ஐரோப்பிய இனமோ அல்லாத தனிப் மொழிப் பிரிவினர்.


Khutran Temti > தமிழில் கூற்றன் திண்டி என்பது செப்ப வடிவம் கூற்றன் - புகளுர் தமிழி கல்வெட்டு 20:3  யாற்றூர் செங்காயபன் தாவன் ஊர் பின்னன் குற்றன் அறுபித்த அதிட்டானம் என்பது.
தமிழி கல்வெட்டுகளில் குறில் நெடில் பிழைகள் நிரம்ப உள்ளன ஆதலால் குற்றன்
என்பது கூற்றன் ஆக இருக்கலாம் என்பர் அறிஞர் திண்டி - சிந்து முத்திரைகளில்
திண்டின் என உள்ளது M2638, IsD, பக்.139. திண்டி யானையைக் குறிக்கும்
சொல். 


Kukka Nasher > தமிழில்
கக்க ந சேர் > கக்கன் ந சேரன். கக்கன் - சிந்து முத்திரைப் பெயர்
H764B. ந - சிந்து முத்திரையில் ஒற்றை எழுத்துச் சொல். சேரன் - சேரர்
குடிப் பெயர்.


Kutir nakkhundi 1710 BC > தமிழில்
கதிர் நக் கந்தி > கதிர் தக்கன் கந்தன் என செப்பமாகப் படிக்கலாம்.
கதிர் - ஞாயிற்றை குறிக்கும் சொல் கதிரவன், கதிர் வேல் ஆகிய பெயர்கள்
இன்றும் வழங்குகினறன்.கதிர்காமம் ஈழத்தின் தென்கோடியில் அமைந்த ஊர்.
நக்கன் -  கர்னூல் கன்மவடக்கல் எனும் ஊர் சிந்து எழுத்தில்
கலிங்கு நக்க நந்தி என  உள்ளது. கந்தன் - சிந்து முத்திரைப்
பெயர். இகர ஈறால் கந்தி  ஆனது. எதியோபிய மன்னர் கந்தி என பெயர்
கொண்டுள்ளனர்.  

                   .
    
 
Kudur Lagama > தமிழில் கூத்தர் இள காம > கூத்தன் இள காமன் என செப்பமாகப் படிக்கலாம். கூத்தன் -  கூத்தபிரான்  மாயக் கூத்தன் என பலவாறு இன்றும் தமிழகத்தில்  வழங்கி வருகிறது.  சிந்து முத்திரை 8525, M 122, IsD, பக்.167. இள -  இளமைக் கருத்து.  காமன் - தூய தமிழ்ப் பெயர். H3669,IsD, பக்.110,சிந்து முத்திரை. கலிக் காமன் நாயனார்.பெரிய புராணப் பெயர்.
 
 
Chedor laomer >தமிழில் சித்தர் இள ஓமர் > சித்தன் இள ஓமன்  என செப்பமாகப் படிக்கலாம். சித்தன் - அறிவன் என சுட்டப் படும் ஆன்றோர். இள -  இளைமைக் கருத்து.  ஓமன் -  பழந்  தமிழ்ப் பெயர் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. பெண்  பால் ஓமனை.
 
 
Khumban Numena 692-688 B.C. > தமிழில்  கம்பன் நம் இன்ன > கம்பன் நம்மன் இன்னன் என செப்பமாகப் படிக்கலாம்.கமபன் - அன் ஈறு தெளிவாக உள்ளது. பல்லவன் கம்ப  வர்மனை வென்று பிற்காலச் சோழர் ஆட்சி நிறுவப்பட்டது.  கம்பன்  பெரும் புலவன்.  சிந்து முத்திரை M1206, IsD,பக்.168.  நம்மன் - பானைஓட்டு சிந்து எழுத்துப் பெயர். இன்னன் -  சிந்து முத்திரைப் பெயர் M2527,IsD, பக்.121.
 
 
Khurbatila >  தமிழில் குறவ அத்திள >  குறவன் அத்தி இள என செப்பமாகப் படிக்கலாம். குறவன் - குறிஞ்சி நிலமகன் சப்பான் மன்னர் ஈமப் பெயர் Takakura  1168-1180 AD > தமிழில் தக்க குற > தக்கன் குறவன் என செப்பமாகப் படிக்கலாம்.அத்தி - சிந்து முத்திரையில் ஏராளமாக காணப்படும் சேரப் பெயர். இள - இளமைப் பொருள்.  அத்திள - உரோமப்  பேரரசை படையெடுப்பில் விழ்த்திய Hun தலைவன்  Atila 434 - 453 A.D. >  தமிழில் அத்திள செப்பமான வடிவம். சிந்து முத்திரை H310a. இவன் ஊர் ஓங்கூர் அதுவே Hungery ஆனதாக அறிஞர் உரைப்பர்.
 
ஈலம் Awan ஆட்சி வரிசையில்
 
Peli 2500 B.C. >  தமிழில் வில்லி என்பது செப்பமான  வடிவம். வகரம் பகரமாய் திரிந்து உள்ளது. சென்னை வில்லவாக்கம், வில்லிபுத்தூர். உறங்கா வில்லி இராமானுசர் வரலாற்றில் தொடர்புடையவர். சேரர் வில்லவன், வில்லி, வில்லாளன்  எனப்பட்டனர்.
 
 
Tata > தமிழில் தத்தன் என்பது செப்பமான வடிவம். பெரிய புராணம் மெய்ப்பொருள் நாயனார் காவலன் தத்தன். சிந்து முத்திரைப்  பெயர் M1415, IsD, பக்.231.
 
 
Gir Namme > தமிழில் கீர் நம்மி  > கீரன் நம்மன் என செப்பமாக படிக்கலாம். கீரன் - மோசி கீரன் சங்க காலப் புலவர். நம்மன் - இகர ஈறு பெற்ற பானைஓட்டு சிந்து  எழுத்துப் பெயர்.
 
 
Siwe Palar Hupak > தமிழில் சிவி பள்ளர் காப்அக்> சிவி பள்ளன்  காப்பன் அக்கன் என செப்பமாகப் படிக்கலாம். சிவி - ஒரு சோழன் பெயர் சிபி. பள்ளன் - ஆள் பெயராக வழங்கி சாதிப்  பெயராக பின்னர் ஆனது. கி. பி.1014 இராசராசன்  கல்வெட்டு பள்ளன் கூத்தன், பள்ளன் கிழான் என இரு இடையரைக் குறிப்பிடுகின்றது. கடைசி scythia மன்னன் Palakus > தமிழில் பள் அக்கு > பள்ளன் அக்கன்  என செப்பமாகப் படிக்கலாம். காப்பன்- சிந்து முத்திரைப் பெயர் K7064B,IsD, பக்.96. காப்அக் - பெரு இன்கா மன்னர்கள் காப்அக் என பட்டம் கொண்டவர்.   
Scythia மன்னன் Palakus தந்தை  Ateas 339 BC > தமிழில் அதியன் என்பது செப்பமான வடிவம். இவன் Alexander தந்தை Philip II ஆல் கொல்லப்பட்டான். இம்மன்னர் பெயர்கள் சித்தியர் தமிழ் மரபினர் என்பதற்கு சான்று.
 

Attar Kittah 1390 B.C. > தமிழில்
அத்தர் கித்த > அத்தன் கித்தன் என செப்பமாகப் படிக்கலாம்.
அத்தன் - தேவாரத்தில் பதிவு எய்தி உள்ள விளிச்சொல். சிந்து முத்திரைகளிலும்
பதிவாகி உள்ளது. 9903,IsD, பக்.91

கித்தன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். சப்பானில் இன்றும் வழங்குகிறது.

           
Umman Unu I > தமிழில்
உம்மண் உன்னு > உமண் உன்னன் என  செப்பமாகப் படிக்கலாம். உமண் -
சிந்து முத்திரைப் பெயர் M1537,IsD,பக்.114. தமிழ் இலக்கியங்களில் உப்பு
வணிகர் உமணார் எனப்பட்டர்.சிந்து எழுத்து பொறித்த தமிழக் பானை ஓடுகளிலும்
உமண் பொறிப்பு உள்ளது. உன்னன் -  சிந்து முத்திரைப் பெயர்
M207,IsD,பக்.88. இங்கு உகர ஈறு பெற்றுள்ளது. உன்னி என கேரளத்தில் இன்றும்
வழங்குகிறது.


 சிறு ஈலமிய அரசியங்களின் அரசர்கள்
 
Manana 1886- 1881 B.C. > தமிழில் மா நன்ன >  மா நன்னன் என செப்பமாக படிக்கலாம்.
மா - பெருமைக் கருத்து. சிந்து முத்திரைகளிலும்,
சங்க  இலக்கியங்களிலும் பயில்வுற்றுள்ளது. நன்னன் - சிந்து
முத்திரைப்

 பெயர், M1070,IsD,பக்.85. கொரிய நாகரிகத்தில் தங்கன் வழியில்  Maereuk 704 - 646 BC> மா எரிஅக்.


Tammaritu 653 - 652 B.C. > தமிழில் தாம் அரிது > தாமன் அரிதன்
என  செப்பமாகப் படிக்கலாம். தாமன் - அல் ஈறு பெற்ற தாமல் ஏரி
காஞ்சி  மாவட்டத்தில் உள்ளது. அரிதன் - விக்கிரமங்கலம் தமிழி
கல்வெட்டில்

 8:1 எயில் அரிதன் செய்வித்தோன் என பொறிக்கப்பட்டு உள்ளது. இங்கு உகர ஈறு வந்துள்ளது.
 
 
 
 Zari மக்களுடைய மன்னன் பெயர் Appalaya > அப்பல் ஆய > அப்பன் 
ஆயன் என செப்பமாகப் படிக்கலாம். அப்பன் - மதிப்படைச் சொல்லாக பழனியப்பன்,
அழகப்பன்  என இன்றும் வழங்குகிறது. மன்னன் பெயர் அல் ஈறு  பெற்று
உள்ளது. சிந்து முத்திரை C5056,IsD, பக்.116
  ஆயன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர் பின் குலப் பெயர் ஆனது. சிந்து  முத்திரை M2509,IsD,பக்.261.

Rulers of Eshnunna


Kallamu > தமிழில்
கள்ள அம்மு > கள்ளன் அம்மன் என செப்பமாகப் படிக்கலாம். கள்ளன் - பண்டு
பெயராக வழங்கிய சொல். அம்மன் -  ஆடவர்க்குப் பெயராக வழங்கியது.
அம்ம(ன்)ம்பாளையம் சேலத்து  ஊர்.

   
Bilalama > தமிழில்
வில்லாள் அம்ம > வில்லாளன் அம்மன் என செப்பமாகப் படிக்கலாம்.
வில்லாளன் - சேரர் வில்லாளர் எனப்பட்டனர். வ > ப திரிபு.


திரை நகர பாலினேசிய அரசர்கள் > Polynesian Kings of Tyre   

Aribas 1230 B.C. >  தமிழில் அறிவன் என்பது செப்பமான வடிவம்.செவ்வாய்க் கோள் அறிவன் எனப்பட்டது. வ>ப திரிபு.



Ithobaal I 878 - 847 B.C. >.
தமிழில் இத்த வால் > இத்தன் வால் என  செப்பமாகப் படிக்கலாம்.
இத்தன் - சிந்து முத்திரைப்பெயர். அகரம்  ஒகரமாக திரிந்துள்ளது. வால் -
ஒளிரும் வெண்மை. வால் > பால்.சப்பானிய முதல் பிரதமர் Ito Hiro Bumi. தானசானியா அதிபர் Julius Nyerere தந்தை  Nyerere Burito 1860- 1942 > பூரி இத்த.


Hiram I 980 - 947 B.C. >
தமிழில் கீரம் >  கீரன் என செப்பமாகப் படிக்கலாம். பிற
நாகரிகங்களில் க > ஹ என திரிந்துள்ளது. அம் ஈறு வந்துள்ளது.புகளூர்
தமிழி கல்வெட்டு 20:12 ல் ணாகன் மகன் பெருங்கீரன்.
 
 
Mattan I 840 - 832 B.C. > தமிழில்
மத்தன் அன் ஈறு பெற்று செப்பமாக உள்ளது. சிந்து முத்திரைகளில் மத், மத்தி
என்றும் பதிவாகி உள்ளது.  T, நரசிபூர் சிந்து எழுத்து பானை ஓட்டில்
உள்ளது. சிந்து முத்திரை

MS 5065. Marduk shapik Zer Mati 1094-1083 B.C. இதில் மத்தி உள்ளது.


Yarla Ganda 2162 - 2156 B.C. > தமிழில்
இருள கண்ட > இருளன் கண்டன்  என செப்பமாகப் படிக்கலாம்.
இருளன் - இருளப்பன், இருளாண்டி  இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர்.
கண்டன் - இராசராச சோழன்

கல்வெட்டில் வழங்கும் பெயர்.

Qumani  என்பது ஓர் ஊர்ப் பெயர். சங்க இலக்கியத்தில் குமணன் ஒரு  வள்ளல். குமணை இன்று ஓர் ஈழத்து ஊர்
.
மேற்கோளில்
ஆயப்பட்ட பெயர்களில் அன் ஈறு வரும் இடங்களில் அது தவிர்க்கபபட்டு ஸ்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கால் தமிழர் பலர் மதம், புதுமை காரணமாகத்
தமிழ்ப் பெயர்களைத் துறந்து பொருளற்ற பெயர்களைக் கொண்ட நிலையில் பல தொன்
நாகரிகங்களில் தமிழ்ப்  பெயர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு உரியோரின்
பெயராக இருந்துள்ளன என்பது அதன் ஆளுமையை, பெருமையை உலகோருக்குப்
பறை சாற்றுவதாய் அமைந்து உள்ளது.

   
மேற்கூறிய பெயர்களைக் கூர்ந்து நோக்கும் போது
அவை செமிட்டிக்  மயமாக்கப்பட்டுள்ளன என்பதோடு அப்பகுதியே தமிழர்
தோன்றிய  நிலப்பகுதி என்று கருத்துரைப்போரின் கருத்தை பொய் ஆக்கவல்லது
என்பது
தெளிவாகிறது. உண்மையில் தமிழர் அங்கிருந்து வந்து  இருந்தால் சிந்து
எழுத்திலும், இக்கால் உள்ள தமிழ் எழுத்திலும் கடு,எடுப்பு, கனைப்பு ஒலிகள்
இருந்திருக்கும். ஆனால் மெல் ஒலிகளே உள்ளன எனும் போது தெற்கே இருந்து
அவர்கள் அங்கு குடியேறிய  பின்பு ஆரியர் தொடர்பால் அவ் ஒலிகளை
அவர்கள் அறிந்தனர் என்பதே ஏற்புடையது. ஆதலால் தெற்கே இருந்து
குடியேறிய மக்கள்  காலத்தால் 8,000 ஆண்டுகள் பழமையுடைய சுமேரிய
நாகரிகத்தினும்  10,000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையானவர் எனக்
கொள்வதில்  தவறு இல்லை.


தமிழறிந்த அறிஞரால் மட்டுமே இவ் ஒப்பாய்வை வளர்த்தெடுக்க  இயலும்
என்பதால் இன்னும் பல அறிஞர்கள் இவ் ஒப்பாய்வை  மேம்படுத்தினால்
தமிழ்,தமிழர் தொன்மை உலகுக்கு அறியவரும்

 
 
H764B ஆங்கில U வடிவம் க ஒலி. கக்கன் னகர மெய் முத்திரையில்  இடம் பெறவில்லை.
 
 
 
Ur seal . ஆள் இருவம் அ ஒலி, கோர்த்த கை V
வடிவம் ம் ஒலி,  மீண்டும் ஆள் உருவம் அ ஒலி, ஆட்டின் கால் னகர மெய் -
ன், அம்அன் >
அம்மன்.
 
 
சேசாத்திரி

வெளி இணைப்புகள்
==============
1. List of Kings of Babylon
2. List of Kings of Akkad
3. Phoenician kings
4. Phoenician kings